தமிழ் செய்திகள்  /  Entertainment  /  What Is The Vijay Salary In Thalapathy 69 Movie

Vijay Salary : அடேங்கப்பா போதுமா பாஸ்.. கடைசி படத்திற்கு தளபதி விஜய் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Feb 06, 2024 06:56 AM IST

தளபதி 69 படத்திற்கு விஜய் வாங்க போகும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்!
நடிகர் விஜய்!

ட்ரெண்டிங் செய்திகள்

லொகேஷன் ஸ்கூட்டிங்கைத் தொடர்ந்து, மூன்றாவது ஷெட்யூல் நவம்பர் இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் தொடங்கியது. முக்கியமான காட்சிகளை படமாக்க இயக்குனர் கணிசமான நடிகர்களை கூட்டி, டிசம்பர் 27 க்குள் அட்டவணையை முடித்தார். சிறிது இடைவெளிக்குப் பிறகு, படப்பிடிப்பு ஜனவரி 7 அன்று சென்னையில் மீண்டும் தொடங்கியது.

அறிக்கையின் படி, தி கோப் பட தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் பங்குதாரருடன் இருவழி ஒப்பந்தம் செய்து, டிஜிட்டல் உரிமைகளை இறுதி செய்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், விஜய்யின் முந்தைய வெளியீடான 'லியோ', ஓடிடி ஒப்பந்தம் காரணமாக அதன் ஹிந்தி பதிப்பிற்கான வெளியீட்டு சிக்கல்களை எதிர்கொண்டது, குறிப்பாக மல்டிபிளக்ஸ் சங்கிலிகளில். இதைத் தீர்க்க, 'தி கோட்' தயாரிப்பாளர்கள், பிரபலமான டிஜிட்டல் தளத்துடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தி பதிப்பிற்கான தனி வெளியீட்டு உத்தியைத் தேர்ந்தெடுத்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தி கோப்' படத்தின் டிஜிட்டல் உரிமைகள் ரூ. 125 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், இந்தி பதிப்பு தனித்தனியாக ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான ரூ.150 கோடி டிஜிட்டல் உரிமை மதிப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த படம் முடிந்தவுடன் அரசியலில் தீவிரமாக களமிறங்க காத்திருக்கும் விஜய், தளபதி 69 படத்துடன் தனது திரைவாழ்க்கையை முடித்து கொள்வதாக அறிவித்து உள்ளார். மேலும் தான் முழு நேரமும் மக்களுக்கானவனாக மாற போவதாக தெரிவித்தார். 

இதனிடையே விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை யார் இயக்குவர், யார் தயாரிப்பார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அந்த படத்திற்கு விஜய் வாங்க போகும் சம்பளம் பற்றிய தகவல் மட்டும் வந்து உள்ளது.

நடிகர் விஜய், The Goat படத்தில் நடிப்பதற்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது. அடுத்து தளபதி 69 ஆவது படம் தன்னுடைய கடைசி படம் என்பதால் அதில் இன்னும் சற்று அதிகமாக சம்பளம் வாங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது கிடைத்து இருக்கும் தகவலின் படி, தளபதி 69 படத்திற்காக விஜய் 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது மட்டும் உண்மையாக மாறினால், இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் விஜய் தான் முதல் இடத்தில் இருப்பார். இருப்பினும் இந்த தகவல் உண்மை இல்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.