Vijayakanth Love: திருமண புடவை வரை ரெடி.. விஜயகாந்த், ராதிகா காதல் முறிவுக்கு பின்னால் இருந்த ரகசியம் என்ன?-what is the reason behind vijayakanth and radhika love breakup - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijayakanth Love: திருமண புடவை வரை ரெடி.. விஜயகாந்த், ராதிகா காதல் முறிவுக்கு பின்னால் இருந்த ரகசியம் என்ன?

Vijayakanth Love: திருமண புடவை வரை ரெடி.. விஜயகாந்த், ராதிகா காதல் முறிவுக்கு பின்னால் இருந்த ரகசியம் என்ன?

Aarthi Balaji HT Tamil
Jan 22, 2024 06:00 AM IST

Vijayakanth,Radhika: விஜயகாந்த் கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது விஜயகாந்தின் சில காதல் விவகாரங்கள்.

ராதிகா - விஜயகாந்த்
ராதிகா - விஜயகாந்த்

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவரது ரசிகர்கள் கொடுத்த அனுப்புகை, அவர் எவ்வளவு பிரபலமான நபர் என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்தது. அதே சமயம் விஜயகாந்த் கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது விஜயகாந்தின் சில காதல் விவகாரங்கள்.

ஒரு காலத்தில் விஜயகாந்த் மற்றும் நடிகை ராதிகா காதல் கதை தென்னிந்திய திரையுலகில் அதிகம் பேசப்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பத்திரிகையாளர் ஜெய்சங்கர், Studio Zhagaram என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ராதிகா - விஜயகாந்த் காதல் கதையை குறிப்பிட்டு உள்ளார்.

விஜயகாந்த், தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் முதலில் செய்தது ரஜினிகாந்த் ஸ்டைல் தான். ஆனால் ரஜினி, கமல் ஆகியோருக்கு சற்று கீழே தான் அவர் இடம் பிடித்தார். அப்போது விஜயகாந்துடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதிகா. 

விஜயகாந்தை ஸ்டைலிஷ் நடிகராக மாற்றியவர் என்றால் அது ராதிகா ஒருவர் தான் என்றே சொல்லலாம். விஜயகாந்தை டாக் ஆஃப் டவுன் ஆக்கி, ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்து பெற வைத்ததற்கு பின்னால் ராதிகா இருக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் போது நாளிதழ்களிலும், பத்திரிக்கைகளிலும் கிசுகிசுக்கள் வந்தன. அப்படித்தான் ராதிகா - விஜயகாந்த் காதல் பற்றி பலரும் பேச ஆரம்பித்தனர்.

ஒருமுறை பேட்டி ஒன்றில் விஜயகாந்த் உடனான உறவு குறித்து ராதிகாவிடம் கேட்டபோது, ​​ராதிகா தெளிவான பதிலை அளித்தார். 'எங்கள் இருவரின் காதல் உண்மை தான். திருமணம் குறித்து தெரிவிப்பதாக விஜயகாந்த் கூறியுள்ளார்' என ராதிகா கூறினார். ஆனால் பின்னர் விஜயகாந்த் தரப்பில் இருந்து அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. 

அதன் பிறகு இரண்டு வருடங்களில் நடிகர் பிரதாப் போத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராதிகா. ராதிகாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

இருவருக்கும் உண்மையான காதல் இருந்தது உண்மை தான். மேலும் விஜயகாந்த், ராதிகாவை திருமணம் செய்ய தயாராக இருந்தபோதும் ஜாதகம் பொருந்தவில்லை. அந்த காதலுக்கு விஜயகாந்தின் நண்பர்களும், தங்கையும் வேண்டாம் என்று கூறி வந்தனர். அந்த உறவு உனக்கு வேண்டாம் என்று எல்லோரும் சொன்னதும் விஜயகாந்த் மாறிவிட்டார்.

அப்படி தான் ராதிகாவிடம் இந்த காதல் வேண்டாம் என்றும் பிரியலாம் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார். திருமணப் புடவையைக் கூட தயார் செய்து வைத்திருந்த ராதிகா. காதலை இழந்த பிறகு மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அவர் நடிகை பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார், அந்த உறவு முறிந்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் அந்த உறவும் முடிவுக்கு வந்தது. தற்போது நடிகர் சரத்குமாரின் மனைவியாக வாழ்ந்து வருகிறார்.

நன்றி: Studio Zhagaram

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.