தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Varalaxmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமார் கணவரின் முதல் மனைவி கவிதா யார்? விவாகரத்திற்கான காரணம் என்ன?

Varalaxmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமார் கணவரின் முதல் மனைவி கவிதா யார்? விவாகரத்திற்கான காரணம் என்ன?

Aarthi Balaji HT Tamil
Jul 02, 2024 06:06 PM IST

Varalaxmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமாருடனான உறவுக்கு முன்னதாக, நிக்கோலாய் மாடல் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் கவிதாவை திருமணம் செய்து கொண்டார்.

வரலட்சுமி சரத்குமார் கணவரின் முதல் மனைவி கவிதா யார்? விவாகரத்திற்கான காரணம் என்ன?
வரலட்சுமி சரத்குமார் கணவரின் முதல் மனைவி கவிதா யார்? விவாகரத்திற்கான காரணம் என்ன?

Varalaxmi Sarathkumar: நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் சச்தேவ் உடன் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். சமூக ஊடகங்கள் வழியாக பல படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

நிக்கோலாய் சச்தேவ் யார்?

வரலட்சுமி சரத்குமாரின் வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ், மும்பையில் உள்ள ஒரு ஆர்ட் கேலரிஸ்ட். உண்மையில், அவர் மும்பையில் கேலரி 7 என்ற பெயரில் தனது சொந்த கலைக்கூடத்தை வைத்திருக்கிறார், இது பிரபலங்கள் அடிக்கடி பார்வையிடுவதாக சொல்லாப்படுகிறது. கேலரி 7 நிக்கோலாயின் பெற்றோர்களான அருண் மற்றும் சந்திரா ஆகியோரால் நிறுவப்பட்டது, அவர்கள் நகரத்தின் புகழ்பெற்ற கலைக்கூட கலைஞர்களும் ஆவார்கள்.