தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amala Paul Son: இது தெரியாம போச்சே.. அமலா பால் குழந்தையின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?

Amala Paul Son: இது தெரியாம போச்சே.. அமலா பால் குழந்தையின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?

Aarthi Balaji HT Tamil
Jun 18, 2024 11:09 AM IST

Amala Paul Son: அமலா பால் மற்றும் அவரது கணவர் ஜெகத் தேசாய் ஆகியோர் ஆண் குழந்தைக்கு பெற்றோராகியுள்ளனர். தனது மகனின் பெயரையும் மிகவும் தனித்துவமான முறையில் வைத்து இருக்கிறார்கள்.

இது தெரியாம போச்சே.. அமலா பால் குழந்தையின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?
இது தெரியாம போச்சே.. அமலா பால் குழந்தையின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?

Amala Paul Son: பிரபல தென்னிந்திய நடிகை அமலா பால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொழிலதிபர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில், திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் ஆகியோர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.

மேலும் அவர் தனது மகனின் பெயரையும் மிகவும் தனித்துவமான முறையில் வைத்து இருக்கிறார்கள்.

குழந்தை பெயர் என்ன?

அமலா பால் தனது மகனின் பெயரையும் தெரிவித்துள்ளார். ILAI எனப் பெயர் வைத்து இருப்பதாக கூறினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அது ஒரு ஆண் குழந்தை. எங்கள் சிறிய அதிசயத்தைப் பாருங்கள். 11. 06. 2024 அன்று பிறந்தார்” என்று அமலா தனது மகனுடன் வீட்டிற்கு வரும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் நேற்று ( ஜூன் 17 ) பதிவிட்டு இருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மகிழ்ச்சியுடன் வந்த அமலா பால்

அமலா பால் தனது மகனை கையில் ஏந்தியபடி மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைந்தார். குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே வீட்டை அழகாக அலங்கரித்து உள்ளனர். தன் அறைக்குச் சென்ற அமலா பாலுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

குழந்தை பெயரின் அர்த்தம் என்ன

அமலா பால் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து குழந்தைக்கு ILAI என்ற பெயர் வைத்து இருப்பதற்கு பின்னால் உள்ள அர்த்தமும், காரணத்தையும் பலரும் தேட ஆரம்பித்தார்கள்.

இலை வகை

இது ஹீப்ரு மொழியை சேர்ந்த பெயர். இந்த பெயருக்கு தமிழில் சொர்க்கம், விண்ணுலகம் என அர்த்தம் சொல்லப்படுகிறது. அதே போல் தமிழில் இலை வகையை குறிக்கிறது. இயற்கை மீது ஆர்வம் கொண்டதன் காரணமாக இலை என அமலா பால் பெயர் வைத்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு திருமணம்

அமலா பால், ஜெகத் தேசாய்க்கு முன்பே திரைப்பட இயக்குனர் ஏ. எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

அதன் பிறகு அமலா பால் கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன், அமலா பாலின் பிறந்தநாளில் (அக்டோபர் 26) காதலை வெளிப்படுத்தினார் ஜெகத் தேசாய்.

 இந்த ஜோடி ஜனவரி மாதம் கர்ப்பத்தை அறிவித்தார்கள். இப்போது அவர்கள் முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.