Thandel Box Office Day 1: நாக சைதன்யாவின் கேரியரில் அதிகபட்ச ஓபனிங்.. தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
Thandel Box Office Day 1: நடிகர் நாகசைதன்யாவின் முதல் நாள் வசூல் பெரிய அளவில் கிடைத்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் விவரங்கள் குறித்துக் காண்போம்.

Thandel Box Office Day 1: நாக சைதன்யாவின் கேரியரில் அதிகபட்ச ஓபனிங் மற்றும் தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்துப் பார்ப்போம்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்த ’தண்டேல்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(பிப்ரவரி 7) திரையரங்குகளில் வெளியான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
இப்படத்தை இயக்குநர் சந்து மொண்டட்டி, ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக எடுத்திருக்கிறார்.
தண்டேல் படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் டாக் காரணமாக அட்வான்ஸ் புக்கிங்கும் நன்றாக நடந்திருந்தது. இதனால், படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
தண்டேல் முதல் நாள் வசூல்:
தண்டேல் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் சுமார் 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்தியாவிலேயே இப்படம் முதல் நாளில் ரூ.10 கோடி (சுமார் ரூ.13 கோடி வசூல்) வசூல் செய்துள்ளது. வெகுநாட்களுக்குப் பின் நாகசைதன்யாவுக்கு இப்படம் பிரேக் தந்த படமாக அமையும் என கூறுகின்றனர்.
தெலுங்கில் நல்ல வரவேற்பினைப் பெற்ற தண்டேல்:
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானாலும் பெரும்பாலான வசூல் தெலுங்கில் இருந்தே கிடைத்திருக்கிறது. தண்டேல் படத்தின் இந்தி மற்றும் தமிழ் டப்பிங் படங்கள் முதல் நாளில் பெரிதாக வசூலை ஈட்டவில்லை. தண்டேல் படத்தின் முதல் நாள் வசூல் விவரங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சைதன்யாவின் மிகப்பெரிய ஓபனிங் ரெக்கார்ட்:
தண்டேல் திரைப்படம், நடிகர் நாக சைதன்யாவின் கேரியரில் இதுவரை நடந்த அதிகபட்ச ஓபனிங் கலெக்ஷனைப் பெற்றுள்ளது.
தண்டேல் திரைப்படக்குழுவும் நேற்றே வெற்றி கொண்டாட்டங்களை கொண்டாடத் தொடங்கிவிட்டது. இந்த வார இறுதியிலும் தண்டேல் திரைப்படம் அதிக வசூலைத் தொடர வாய்ப்புள்ளது. அதிக போட்டி இல்லாததால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், தண்டேல் படம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக செயல்படுவதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க: தண்டேல் படத்தின் விமர்சனம்
மேலும் படிக்க: தண்டேல் படம் குறித்து தயாரிப்பாளர் கூறியது!
தண்டேல் ஸ்ரீகாகுளம் மீனவர்களின் நிஜக்கதை:
தண்டேல் படத்தில் ஸ்ரீகாகுளம் மீனவர் ராஜு கதாபாத்திரத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்தது ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறது. சத்யா என்கிற புஜ்ஜித்தல்லி என்கிற கதாபாத்திரத்தில் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தவர், நடிகை சாய் பல்லவி. இப்படத்தை சந்து மொண்டெட்டி இயக்கியுள்ளார்.
பாகிஸ்தான் சிறையில் பல மாதங்களைக் கழித்துவிட்டு இந்தியா திரும்பிய ஸ்ரீகாகுளம் மீனவர்களின் நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது. படத்தின் முதல் அரை மணி நேர காட்சி சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தாலும், அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தண்டேல் படக்குழு விவரம்:
தண்டேல் திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோருடன் ஆடுகளம் நரேன், பிரகாஷ், கருணாகரன், பப்லு பிருத்விராஜ், சரண்தீப் மற்றும் கல்பலதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஷண்டத் சைனுதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாசு தயாரிக்கும் இப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார்.
தண்டேல் திரைப்படத்தின் பிளஸ்:
இசை இந்த தண்டேல் திரைப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது என்கின்றனர். பாடல்களின் காட்சி அமைப்பும் நன்றாக இருக்கிறது என்கின்றனர்.
தண்டேல் திரைப்படத்தில் இடைவேளை காட்சி, தேசபக்தி காட்சிகள், க்ளைமாக்ஸ் அற்புதமாக இருந்ததாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியே மிகவும் நன்றாக இருந்ததாகக் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தண்டேல்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்