Game Changer: பிஸியாக இருக்கும் இயக்குநர் ஷங்கர்.. இந்த ஆண்டு வெளியாகுமா ராம் சரணின் கேம் சேஞ்சர்?
Game Changer: கேம் சேஞ்சர் படம் இந்த வருடம் வெளியாகுமா என்று இயக்குனர் ஷங்கரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்தார்.

பிஸியாக இருக்கும் இயக்குநர் ஷங்கர்.. இந்த ஆண்டு வெளியாகுமா ராம் சரணின் கேம் சேஞ்சர்
Game Changer: மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் பான் இந்தியா படமான கேம் சேஞ்சருக்கு அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால், ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்தார் ராம்ச ரண். இந்தியன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இயக்குநர் ஷங்கர் ஹைதராபாத் சென்று இருந்தார். இந்தியன் 2 படத்தின் முன் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், படக்குழு நேற்று ( ஜூலை 8 ) பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
இந்நிலையில் கேம் சேஞ்சர் இந்த வருடம் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஷங்கர் பதிலளித்துள்ளார்.