Suriya: சூர்யாவின் முதல் வருமானம் என்ன? உயரத்திற்கு சென்றது எப்படி.. சொத்து மதிப்பு என்ன?
Suriya: சூர்யாவின் முதல் வருமானம் என்ன? எவ்வாறு சம்பாதிக்கப்படுகின்றன என்பது பரபரப்பான விஷயமாகிவிட்டது.

எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறி ஆசை படத்தில் நடிக்க மறுத்த அதே சூர்யாதான், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரமா சூர்யா சரியாக வருவார் என்று நம்பிக்கையூட்டினார்.
சூர்யா ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஹீரோ. குறிப்பாக கஷ்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுகிறார்.
சூர்யாவின் கேரியரில் நந்தா படம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது எனலாம். தன்னை விமர்சித்தவர்களுக்கு தன் நடிப்பின் வழி பதிலடி கொடுக்க ஆரம்பித்த சூர்யா நந்தா தொடங்கி, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, ஏழாம் அறிவு என தொடர்ச்சியா வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார். ரொமான்டிக் காதலன், அன்பான அண்ணன், சேட்டை செய்யும் மகன், பாசம் மிகு அப்பா, ஸ்ட்ரிக்டான போலீஸ், என தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபிக்க இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறார்.
நடிகராக தன்னை நிரூபித்த சூர்யா, இதுவரை உள்ளடக்கம் சார்ந்த படங்களில் நடித்து விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்று உள்ளார். தற்போதைய ஹீரோக்களில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக அறியப்பட்ட சூர்யா, பணக்கார நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
பொது சேவையில் சூர்யா
நடிப்பு, வருமானம் என்று மற்றும் ஒதுங்கி விடாமல் சமூகத்திற்கும் தன்னால் ஆன விஷயங்களை செய்து வருகிறார். அகரம் என்ற பெயரில் பொது நலன் கருதிய லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் வழியாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.
சூர்யாவின் சொத்து மதிப்பு
தற்போது, அவரது சொத்து மதிப்பு என்று வரும் போது, சமீபத்தில் மும்பையில் ரூ.70 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். தற்போது சூர்யாவின் சொத்து ரூ.350 கோடியை தாண்டியுள்ளது. சென்னையிலும் வீடு உள்ளது. மேலும், பல சொகுசு கார்களை வைத்திருக்கும் சூர்யா, சொந்தமாக பேனரையும் அமைத்துள்ளார். இந்த பேனரில் பல படங்கள் வெளியாகி நல்ல வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில் சூர்யாவின் முதல் வருமானம் என்ன? எவ்வாறு சம்பாதிக்கப்படுகின்றன என்பது பரபரப்பான விஷயமாகிவிட்டது.
சூர்யாவின் முதல் சம்பளம்
முன்னதாக ஒரு நேர்காணலில் பங்கேற்ற சூர்யா தனது முதல் சம்பாத்தியம் குறித்து பேசி இருந்தார்.
18 மணி நேரம் உழைத்து ரூ.1000 க்கும் குறைவான சம்பளம் பெற்றதாக கூறினார். திரைப்படங்களுக்கு வருவதற்கு முன், தான் ஒரு ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கடையில் வேலை செய்தேன், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்தால், அவர்கள் 736 ரூபாய் கொடுத்தார்கள் என சொல்லி இருந்தார்.
தற்போதைய சம்பளம்
தற்போது சூர்யா ஒரு படத்திற்கு ரூ. 25 முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்