‘பச்ச சட்ட’ பாட்காஸ்ட் பிரியர்களே.. அந்த தனஞ்செயன் தாத்தா கதை தெரியுமா? ஆர்ஜே பாலாஜி விடாம பேசும் காரணம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘பச்ச சட்ட’ பாட்காஸ்ட் பிரியர்களே.. அந்த தனஞ்செயன் தாத்தா கதை தெரியுமா? ஆர்ஜே பாலாஜி விடாம பேசும் காரணம் என்ன?

‘பச்ச சட்ட’ பாட்காஸ்ட் பிரியர்களே.. அந்த தனஞ்செயன் தாத்தா கதை தெரியுமா? ஆர்ஜே பாலாஜி விடாம பேசும் காரணம் என்ன?

Malavica Natarajan HT Tamil
Dec 24, 2024 05:22 PM IST

ஸ்பாட்டிபை-யில் ஒலிபரப்பப்படும் ஆர்ஜே பாலாஜியின் பச்ச சட்ட பாட் காஸ்ட்டில் அடிக்கடி கேட்கப்படும் பெயர் தனஞ்செயன். யார் இந்த தனஞ்செயன் என்று பார்ப்போமா?

‘பச்ச சட்ட’ பாட்காஸ்ட் பிரியர்களே.. அந்த தனஞ்செயன் தாத்தா கதை தெரியுமா? ஆர்ஜே பாலாஜி விடாம பேசும் காரணம் என்ன?
‘பச்ச சட்ட’ பாட்காஸ்ட் பிரியர்களே.. அந்த தனஞ்செயன் தாத்தா கதை தெரியுமா? ஆர்ஜே பாலாஜி விடாம பேசும் காரணம் என்ன?

சினிமாக்காரர்களை தவிர்த்த ஆர்ஜே பாலாஜி

அவரது நிகழ்ச்சிகளில் அவர் படங்களை விமர்சனம் செய்யும் விதமே வேற ரகம். இப்படி இருப்பதாலே அவர் சினிமாக்காரர்களுடன் நட்பு பாராட்ட தயங்கினார். அப்படி இருந்தவரையும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க வைத்து மாஸ் செய்திருப்பார்.

ஆர்ஜே பாலாஜியின் கிராஸ் டாக் ஷோவை வைத்தே நானும் ரவுடி தான் படத்தில் ஒரு காமெடி சீனும் வரும். அந்த காட்சியில் அஞ்சான் படத்துக்கு 5 டிக்கெட் இருக்கு..முகமுடி படத்துக்கு 3 டிக்கெட் இருக்குன்னு அவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் படங்களை தாக்கிப் பேசி இருப்பார். இது பெரிதளவில் வைரலானது.

ஆர்ஜே பாலாஜிக்கு நடந்த சம்பவம்

அதற்கு காரணம் ஆர்.ஜே பாலாஜி செய்த சம்பவமும் அவருக்கு நடந்த சம்பவமும் தான். UTV தயாரிப்பு நிறுவனம் ஆர்யா, பிரேம்ஜி, சந்தானத்தை முன்னணி கதாப்பாத்திரங்களாக வைத்து சேட்டை எனும் படத்தை எடுத்திருந்தது. இந்தப் படம் வெளியான பின், ஆர்ஜே பாலாஜி தனது ரேடியோ ஷோவில் கலாய்த்து தள்ளி இருப்பார்.

இதைக்கேட்ட UTV தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த நபர் ஒருவர், ஆர்ஜே பாலாஜிக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதனால் கோவமடைந்த ஆர்ஜே பாலாஜி UTV நிறுவனத்தினர் தன்னை மிரட்டுவதாக ட்வீட் செய்துவிட்டார்.

தவறுதலக மாட்டிக் கொண்ட தனஞ்செயன்

இது பெரும் பிரச்சனையாக மாறிய நிலையில், UTV தனஞ்செயன் அந்த பிரச்சனையை சரிசெய்ய முயற்சித்தார். ஆனால், அதற்குள் தனஞ்செயன் தான் ஆர்ஜே பாலாஜியை மிரட்டினார் என பலரும் தவறாக புரிந்து கொண்டனர். ஆனால் அந்த பிரச்சனையை முடித்து வைத்ததே தனஞ்செயன் தானாம்.

அதுமட்டுமின்றி, தனஞ்செயன் அந்த பிரச்சனை எல்லாவற்றையும் மறந்து சகஜமாக பழகியதுடன் அவரின் தயாரிப்பிலேயே தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் தந்திரன் போன்ற படங்களில் நடிக்கவும் வைத்துள்ளார். அத்துடன், இருவரும் அந்த பிரச்சனையை மறந்துவிட்டு, நானும் ரவுடி தான் படத்தில் அவர் தயாரித்த படங்களை கிண்டல் செய்து விட்டேன். உங்களுக்கு பிரச்சனை இல்லை தான என்று போன் செய்தும் பேசியுள்ளாராம்.

தனஞ்செயன் மீது வைத்த அன்பு

அத்தோடு, அவர் மனதளவில் மிகவும் நல்லவர். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எல்லோரிடமும் அன்பாக இருப்பார் என்று கிரிக்கெட் கமெண்ட்ரி சமயத்திலும் பேசியுள்ளாராம்.

பச்ச சட்ட பாட் காஸ்ட்டில் கூட நல்ல விஷயம் சொல்லும் போது அங்கு பயன்படுத்தப்படும் பெயராக தனஞ்செயன் தான் இருக்கும். ஆர்ஜே பாலாஜி அந்த அளவு அவரை நேசிப்பதால் தான் இதனை செய்து வருகிறார். ஆனால், இன்றும் பலர் தயாரிப்பாளர் தனஞ்செயனை ஆர்ஜே பாலாஜி விமர்சிப்பதாக கூறி வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.