தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suriya: அமிதாப் பச்சனை திடீரென சந்தித்த சூர்யா - ஒருவேளை அப்படி இருக்குமோ?

Suriya: அமிதாப் பச்சனை திடீரென சந்தித்த சூர்யா - ஒருவேளை அப்படி இருக்குமோ?

Marimuthu M HT Tamil
Jan 14, 2024 03:18 PM IST

நடிகர் சூர்யா, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனை சந்தித்துள்ளார்.

அமிதாப் பச்சனை திடீரென சந்தித்த சூர்யா - ஒருவேளை அப்படி இருக்குமோ?
அமிதாப் பச்சனை திடீரென சந்தித்த சூர்யா - ஒருவேளை அப்படி இருக்குமோ?

ட்ரெண்டிங் செய்திகள்

ஐஎஸ்பிஎல் எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ISPL) எனப்படும் கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குழுக்களை பல்வேறு திரைநட்சத்திரங்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். அதன்படி, சென்னை அணியை சூர்யாவும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும் வாங்கியுள்ளனர். அதேபோல், ஹைதராபாத் அணியை ராம் சரணும், கொல்கத்தா அணியை சயிப் அலிகான் மற்றும் கரீனா கபூரும் பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும் வாங்கியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியினை பிரபலப்படுத்தும் விளம்பரத்திற்காக மும்பையில் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் மற்றும் சூர்யா ஆகியோர் பங்கேற்றனர். இந்த தொடரானது வரும் மார் மாதம் 2ஆம் தேதி தொடங்கி, 9ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 19 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. குறிப்பாக, டென்னிஸ் பந்தினை பயன்படுத்தி, இந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த மூன்று நடிகர்களின் சந்திப்பின்போது, அமிதாப் பச்சன் நடிகர் சூர்யாவின் நடிப்பு குறித்து பாராட்டும், சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. மேலும் அக்‌ஷய் குமாரும் சூர்யாவோடு நட்பு பாராட்டி பேசிக்கொண்டிருந்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்