Sasa Yogam Luck: சனி கொடுக்கும் யோகம்; வள்ளல் மனம்; சென்ற இடமெல்லாம் மரியாதை; சாதிக்கும் சச யோகம் - யாருக்கு வாய்க்கும்?
பஞ்ச மகா புருஷ யோகத்தில் தலைசிறந்த யோகமாக இந்த சசயோகமானது இருக்கிறது. இது இருந்து விட்டாலே உங்களுக்குள் தன்னம்பிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட, அதை பொருட்படுத்தாமல் வேலை செய்வீர்கள். உங்களை பலர் எதிர்ப்பார்கள்.
ஜாதகத்தில் என்ன மாதிரியான அமைப்பு இருந்தால் சச யோகம் உருவாகும். சச யோகம் பெற்றவர்களின் குணநலன் எப்படி இருக்கும் என்பதை பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “சச யோகம் என்பது சனி பகவானால் ஏற்படக்கூடிய யோகம். லக்னத்திற்கோ,சந்திரனுக்கோ, ஒன்று நான்கு,ஏழு, பத்து ஆகிய இடங்களிலோ, சனி பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பின் சச யோகமானது உருவாகும்.
எடுத்துக்காட்டாக ஒருவர் துலாம் ராசி மற்றும் துலாம் லக்னத்தை கொண்டிருக்கும் போது, அங்கே சனி பகவான் இருந்தால் அது அதி அற்புதமான சக யோகமாகும். சனிபகவான் உழைப்புக்கான, சேவைக்கான கிரகம் ஆகும்.
இந்த யோகம் பெற்றவர்கள் பொதுச்சேவையில் மிகச் சிறப்பாக இயங்குவார்கள். தனக்கு நல்லது செய்வதை தாண்டி, பிறருக்கு, ஊராருக்கு, உலகத்திற்கு விழுந்து விழுந்து உதவி செய்யும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களது மனம் அப்படிப்பட்ட அழகான மனமாக இருக்கும்.
இவர்கள் உழைத்து, போராடி தனக்கான உச்சத்தை தொடுவார்கள். இதில் இருக்கக்கூடிய ஒரு நெகட்டிவான விஷயம் என்னவென்றால் நீங்கள் இருக்கக்கூடிய உயரம், உங்களுடைய மனதின் தன்மை, உங்களுடைய அக்மார்க் குணம் உள்ளிட்டவற்றை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
அதுதான் இதில் இருப்பதிலேயே மிகப்பெரிய வருத்தமான விஷயம் ஆகும். குறிப்பாக ஆன்மிகத்தில் உங்களுக்கு அதிகமான நாட்டம் இருக்கும். ஆன்மிகத்தில் அதிகப்படியாகவும் செலவு செய்வீர்கள், நீங்கள் ஒரு ஆன்மிக இடத்தில் சென்று நிற்கும் பொழுது, உங்களுக்கான மரியாதை தானாக உங்கள் கைவந்து சேரும். அதேபோல நீங்கள் மனதார உருகி இறைவனை வேண்டும் பட்சத்தில், அவர் உங்களுக்காக இறங்கி வருவார்
ஆனால், உங்களின் பலம் உங்களுக்கே தெரியாது. உங்களுக்குள் எப்போதுமே கவலை, மன அழுத்தம், குழப்பம் உள்ளிட்டவை ஓடிக்கொண்டே இருக்கும். தயவு செய்து அதையெல்லாம் தூக்கிப் போட்டு விடுங்கள்.
காரணம், நீங்கள் இருக்கும் இடமானது அப்படிப்பட்ட ஒரு புனித இடமாக மாறும். நீங்கள் ஒரு இடத்திற்கு சென்றால் அந்த இடமானது வளர்ச்சியை நோக்கி செல்லும். நீங்கள் ஒரு விஷயத்தை கையில் எடுத்தீர்கள் என்றால், அதில் நிச்சயமாக சாதித்துக் காட்டுவீர்கள்.
பஞ்ச மகா புருஷ யோகத்தில் தலைசிறந்த யோகமாக இந்த சசயோகமானது இருக்கிறது. இது இருந்து விட்டாலே உங்களுக்குள் தன்னம்பிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட, அதை பொருட்படுத்தாமல் வேலை செய்வீர்கள்.
உங்களை பலர் எதிர்ப்பார்கள். உங்களை பார்த்து பொறாமைப்படுவார்கள். காரணம், உங்களுடைய வேலையானது தனித்துவமாக இருக்கும். இந்த சக யோகத்தோடு பாவிகள் தொடர்பு கொண்டால் வாழ்வில் அதிகமான போராட்டத்தை சந்திப்பீர்கள்.
இவர்களுக்கு எல்லாமுமாக அவர்களது அம்மா இருப்பார்கள். அவர்களது மனதை மட்டும் இவர்கள் நோகடிக்காமல் இருந்தால் தொடர்ச்சியாக இவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் அவர்களது அம்மாவின் அருகில் இருக்கும் பொழுது அவர்களது வளர்ச்சியானது அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருக்கும். அதை அவர்களால் உணர முடியும். நீங்கள் குலதெய்வ வழிபாட்டை நன்றாக எடுத்து செய்ய வேண்டும் அதே போல அம்மன் வழிபாட்டையும் எடுத்து செய்யுங்கள்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்