அமேசான் பிரைமின் டாப் 10 வெப் சீரிஸ் எது? 2024ல் இதையெல்லாம் பாக்க மிஸ் பண்ணிடாதிங்க!
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான வெப் தொடர்களில் மக்கள் விரும்பிய டாப் 10 வெப் தொடர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பிரபல ஓடிடி தளமான 'அமேசான் பிரைம் வீடியோ' இந்த ஆண்டு நிறைய வெப் சீரிஸ்களை வெளியிட்டுள்ளது. இந்த தொடர்கள் க்ரைம் த்ரில்லர், ஆக்ஷன், ஹாரர், காமெடி, ரொமாண்டிக் உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் வெளிவந்துள்ளன. இவற்றில் சில வெப் சீரிஸ்கள் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024ம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான வெப் சீரிஸ்களில் மக்களை கவர்ந்த டாப் 10 வெப் சீரிஸ்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
இன்ஸ்பெக்டர் ரிஷி
இன்ஸ்பெக்டர் ரிஷியின் வலைத் தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. இந்த க்ரைம் த்ரில்லர் தொடரில் வீன் சந்திரா, சுனைனா எல்லா, மாலினி ஜீவரத்தினம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ரிஷி தொடர் காட்டில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிப்பதை விவரிக்கிறது