தனுஷின் குபேரா மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. மொத்தம் இன்று வெளியாகும் படங்கள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தனுஷின் குபேரா மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. மொத்தம் இன்று வெளியாகும் படங்கள் என்னென்ன?

தனுஷின் குபேரா மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. மொத்தம் இன்று வெளியாகும் படங்கள் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
Published Jun 20, 2025 09:35 AM IST

தனுஷின், குபேரா இன்று வெளியாக உள்ள நிலையில், இந்த படத்துடன் அதர்வா முரளியின் டி.என்.ஏ மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

தனுஷின் குபேரா மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. மொத்தம் இன்று வெளியாகும் படங்கள் என்னென்ன?
தனுஷின் குபேரா மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. மொத்தம் இன்று வெளியாகும் படங்கள் என்னென்ன?

கோலிவுட் ஸ்டார் ஹீரோ தனுஷ், டோலிவுட் கிங் நாகார்ஜுனா, நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள தெலுங்கு, தமிழ் திரைப்படம் குபேரா. தெலுங்கு பிரபலமான இயக்குனர் சேகர் கம்முலா குபேரா திரைப்படத்தை இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் சுனில் நாரங், புஸ்கூர் ராம்மோகன் ராவ் குபேரா மூவியை தயாரித்து உள்ளனர். . படத்தின் ஓடிடி உரிமைகள் அமேசான் பிரைம் வீடியோவுக்கு விற்பனை செய்யப்பட்டது உள்ளது. இந்தப் படம் ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஏப்ரலில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில தாமதங்களால் தற்போது ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது.

டிஎன்ஏ

தர்வா முரளி, நிமிஷா சஜயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். டாடா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த அம்பேத்குமார், இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

படம் தொடங்கிய நாளில் இருந்தே, எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படங்களில் இத்திரைப்படமும் இருந்தது. ஜூன் 20 ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம், ஜூன் 18 ம் தேதி, பிரிமியர் காட்சியாக சென்னையில் டிஎன்ஏ திரைப்படம் திரையிடப்பட்டது.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் 2025 ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வெளியான ஒரு காமெடி-ஹீஸ்ட் படமாகும். இந்த படத்தில் வயீபவ், அத்துல்யா ரவி, ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர். மேலும், படத்திற்கு இசையமைத்துள்ளார் டி. இம்மன்.

படத்தின் கதை, கடன்களில் சிக்கிய இருவர், பந்தி மற்றும் பூசி, நான்கு முன்னாள் கேங்ஸ்டர்களுடன் சேர்ந்து ஒரு பெரிய கொள்ளை வேலை செய்ய முயற்சி செய்வதைச் சுற்றி நகர்கிறது. ஆனால், இந்த முயற்சி எதிர்பாராத திருப்பங்களோடு நகைச்சுவை மற்றும் த்ரில்லுடன் பேசப்படுகின்றது. இயக்குனர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் கூட்டணியில் இயக்கி உள்ளனர். இந்த படம், உண்மையான காமெடி ரசிகர்களுக்கு ஏற்றது.