விமான டிக்கெட் கொடுத்து வரவழைத்து நடிகர் கடத்தல்.. 12 மணி நேரம் டார்ச்சர்! சினிமா பாணியில் கடத்தல் கும்பலிடம் எஸ்கேப்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விமான டிக்கெட் கொடுத்து வரவழைத்து நடிகர் கடத்தல்.. 12 மணி நேரம் டார்ச்சர்! சினிமா பாணியில் கடத்தல் கும்பலிடம் எஸ்கேப்

விமான டிக்கெட் கொடுத்து வரவழைத்து நடிகர் கடத்தல்.. 12 மணி நேரம் டார்ச்சர்! சினிமா பாணியில் கடத்தல் கும்பலிடம் எஸ்கேப்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 11, 2024 05:51 PM IST

விமான டிக்கெட் கொடுத்து வரவழைத்து பாலிவுட் நடிகரை கடத்திய கும்பல், அவரை 12 மணி நேரம் வரை டார்ச்சர் செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சினிமா பாணியில் கடத்தல் கும்பலிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார் பாதிக்கப்பட்ட நடிகரான முஷ்டாக் கான்.

விமான டிக்கெட் கொடுத்து வரவழைத்து நடிகர் கடத்தல்.. 12 மணி நேரம் டார்ச்சர்! சினிமா பாணியில் கடத்தல் கும்பலிடம் எஸ்கேப்
விமான டிக்கெட் கொடுத்து வரவழைத்து நடிகர் கடத்தல்.. 12 மணி நேரம் டார்ச்சர்! சினிமா பாணியில் கடத்தல் கும்பலிடம் எஸ்கேப் (Instagram)

முஷ்டாக் கானுக்கு நடந்தது என்ன?

முஷ்டாக் கான் விமான டிக்கெட்டுகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதாகவும், அவரது கணக்குக்கு முன்கூட்டியே பணம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோது, ​​​​அவரை ஒரு காரில் உட்காரச் வைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் அழைத்து சென்ற கார் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள பிஜ்னோருக்குச் சென்றது.

கடத்தல்காரர்கள் முஷ்தாக்கை கிட்டத்தட்ட 12 மணிநேரம் சித்திரவதை செய்ததாகவும், அவர் மீட்க ரூ. 1 கோடி பணைய தொகை கேட்டதாகவும், நடிகரின் பிஸினஸ் பார்ட்னர் சிவம் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் நடிகர் மற்றும் அவரது மகனின் கணக்கில் இருந்து ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பணம் எடுத்ததாக மேலும் சிவம் வெளிப்படுத்தியுள்ளார்.

கடத்தல்காரர்களிடம் இருந்து முஷ்டாக் தப்பத்தது எப்படி?

அதிகாலையில் மசூதி ஒன்றில் இருந்து ஆசானின் குரலைக் கேட்ட முஷ்தாக், அந்த மசூதி இருக்கும் இடத்தை அறிந்து தன்னை அடைத்து வைத்திருந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடம் உதவியை நாடியுள்ளார்.

இதையடுத்து, "முஷ்டாக் சாருக்கு நடந்ததை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், அவர் மனநிலை அமைதியடைந்த பிறகு தான் கடத்தப்பட்டது குறித்து போலீசில் செய்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து பிஜ்னோருக்கு சென்று இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த கடத்தலுக்கு விமான டிக்கெட் ஆதாரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் வங்கி பரிவர்த்தனை, விமான நிலையத்துக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆதாரமாக இருக்கின்றன. அவர் கடத்தப்பட்ட அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டைக் கூட, அவரால் அடையாளம் காட்ட முடியும். எனவே போலீசார் விரைவில் கடத்தல் கும்பலை கைது செய்வார்கள் என நம்புவதாக" சிவம் கூறினார்.

சமீபத்தில், தனியார் நிகழ்ச்சிக்காக ஹரித்வாருக்குச் சென்றபோது பாலிவுட் நகைச்சுவை நடிகர் சுனில் பால் கூட கடத்தப்பட்டு, இதேபோன்ற சோதனையை எதிர்கொண்டார். அவரை விடுவிக்க ரூ. 20 லட்சம் ரூபாய் பணைய தொகை கேட்டு பிணைக் கைதியாக வைத்திருந்தனர். இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சுனில் சுமார் ரூ. 8 லட்சம் செலுத்தி மீட்கப்பட்டார்.

ஸ்த்ரீ 2 திரைப்படம்

நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகியிருந்த ஸ்த்ரீ 2, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் த்ரிபாதி, அபிஷேக் பானர்ஜ், முஷ்டாக் கான் உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 800 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. படத்தில் முஷ்டாக் கான், எம்எல்ஏ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நடிகை தமன்னா, வருண் தவான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் படத்தில் நடித்திருந்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.