MSV : எம்எஸ்வியை கண்டபடி மிரட்டினோம்.. மெஸ் விஸ்வநாதன் சம்பளம் எவ்வளவு பாருங்க.. ராமமூர்த்திக்கும்தா.. நெகிழ்ந்த சரண்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Msv : எம்எஸ்வியை கண்டபடி மிரட்டினோம்.. மெஸ் விஸ்வநாதன் சம்பளம் எவ்வளவு பாருங்க.. ராமமூர்த்திக்கும்தா.. நெகிழ்ந்த சரண்

MSV : எம்எஸ்வியை கண்டபடி மிரட்டினோம்.. மெஸ் விஸ்வநாதன் சம்பளம் எவ்வளவு பாருங்க.. ராமமூர்த்திக்கும்தா.. நெகிழ்ந்த சரண்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 18, 2025 07:00 AM IST

MSV :முதல் நாள் சூட்டிங்கில் எம்எஸ்வி யை வைத்து தான் முதல் ஷாட் எடுத்தேன். கே.பி சார்தான் முதல் நாள் ஸ்டார்ட் சொல்லி கேமராவ ஆன் பண்ணார். எம்எஸ்வி மெஸ்ல இருந்து திரை சீலை விலக்கி விட்டு கரண்டியை ஆட்டிட்டு வந்தார். ரொம்ப அபாரமா பண்ணார்.

MSV : எம்எஸ்வியை கண்டபடி மிரட்டினோம்.. மெஸ் விஸ்வநாதன் சம்பளம் எவ்வளவு பாருங்க.. ராமமூர்த்திக்கும்தா.. நெகிழ்ந்த சரண்
MSV : எம்எஸ்வியை கண்டபடி மிரட்டினோம்.. மெஸ் விஸ்வநாதன் சம்பளம் எவ்வளவு பாருங்க.. ராமமூர்த்திக்கும்தா.. நெகிழ்ந்த சரண்

எம்.எஸ். விஸ்வ நாதன் such a sweet legend. அவ்ளோ ஒரு ஸ்வீட் பெர்சன். ஒரு நாள் விவேக் எனக்கு போன் செய்து தூர்தர்சனில் எம்எஸ்வி ஒரு பேட்டி குடுத்துட்டுகிட்டு இருக்கார். நல்லா இருக்கு. கொஞ்சம் பாருங்களேன் என்றார்.

நான் பார்த்ததேன். எம்எஸ்வி பேட்டி கொடுத்து கொண்டிருந்த போதே பயங்கர எக்ஸ்பிரசீவா இருந்தார். அவரிடம் பயங்கர சைல்டிஷ் இருந்தது. எனக்கு பார்த்த உடனே ரொம்ப பிடிச்சிருச்சு. அப்பறம் நான் விவேக்கிற்கு போன் பண்ணி இவரை நம்ம படத்தில் நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்றேன். ஏனென்றால் எப்போதுமே முதல் படம் பண்ணும் போது பேசப்படக் கூடிய ஒரு புது விஷயம் இருந்தால் கொஞ்சம் திரும்பி பார்ப்பாங்க. அதுனால நான் கொஞ்சம் அவர வச்சு பண்ணா எப்படி இருக்கும் என்று கேட்டேன். 

மெஸ் விஸ்வநாதன் உருவான கதை

அவருக்கு எந்த மாதிரி ஒரு கேரக்டர் கொடுக்கலாம் என்று யோசித்த போது ஹீரோ ஒரு மேன்சனில் தங்கி இருக்குறதால அங்க ஒரு மெஸ் ஒன்னு வைப்போம் என்று முடிவெடுத்தேன். அவரை பார்த்த பிறகுதான் அந்த கேரக்டரையே உருவாக்கினேன் என்றார். அதுனாலதான் மெஸ்சுக்கு விஸ்வநாதன் மெஸ் என்று பெயர் வைத்தேன் ஏன்னா மெஸ் அப்படிற போது எம். எஸ் என்பது ஒரே மாதிரி சவுண்ட் வரும்ன்னு முடிவு செய்தேன்.

அதற்கு பிறகு நானும் விவேக்கும் அவரை போய் பார்த்தோம். ஆனா அவர் அய்யோ.. நான் எங்க நடிக்கிறது.. அது எல்லாம் முடியாது, அப்படின்னு சொல்லிட்டார். ஏம்பா என்ன மியூசிக் பண்ண கூப்பிடுங்க. நீங்க என்ன நடிக்குறதுக்கு கூப்பிடுறீங்க. நா நடிக்குறதுக்கு தான் வந்தேன் என்ன பால கோபாலானா நடிக்க சொன்னாங்க. கடைசில பால கண்ணகியா நடிச்சவங்கள விட நா வயது கம்மியா தெரியுறேன்னு அவங்கள மாத்தாம என்ன மாத்திட்டாங்க அப்படின்னு சொல்லிட்டு இருந்தார். நாங்க அவர் கிட்ட தொடர்ந்து முயற்சி எடுத்தது 3 மாச காலம் இருக்கும்.. நடையாய் நடந்தோம். விவேக் எப்ப சூட்டிங் இல்லனாலும் உடனே என்னை கூப்பிடுவார். நாங்க போய் அவர்கிட்ட கேட்போம்.

அவர கண்ட படி எல்லாம் மிரட்டி இருக்கோம். அவங்க அம்மாகிட்ட அவருக்கு ரொம்ப பயம். அதுனால அவங்க அம்மா கிட்ட நாங்க ஒரு லெட்டர் வைப்போம். அவர் அப்படியே ஒளிஞ்சு இருந்து பார்ப்பார். நாங்க அவர்கிட்ட நீங்க நடிக்கணும் அப்படின்னுலாம் இல்ல. உங்க கிட்ட பேசினால் இந்த வேலை எல்லாம் நடக்காது. அதனால் இந்த லெட்டரில் எழுதி உங்க அம்மா கிட்ட உங்க மனச மாத்த சொல்லி லெட்டர் குடுத்துருக்கோம். நீங்கள் ஆச்சு.. உங்க அம்மா ஆச்சு.. உங்க அம்மா பாடுன்னு சொல்லிட்டு வந்துடுவோம்.

அவரு உண்மையிலேயே பயந்துட்டு இருப்பார். அப்பறம் ரொம்ப நாள் கழிச்சு சரி நான் நடிக்குறேன்னார். ஆனா ஒன்னு எனக்கு என்ன சம்பளம் கொடுக்குறீங்கன்னு கேட்டார். என்ன சம்பளம் சார் வேணும்ன்னு கேட்டோம்.

உடனே எனக்கு வந்து 10 லட்ச ரூபாய் கொடுக்கணும். எனக்கு 5 . ராமமூர்த்திக்கு 5 அப்படின்னார். சார் அவர் வந்து இதுல நடிக்கல சார்.. நீங்க தா நடிக்க போறீங்கன்னு சொன்னதுக்கு So what. விஸ்வநாதன் ராம மூர்த்தி அப்படின்னா அது அப்படிதான் என்றார். அதுதான் அவருடைய கிரேட்னஸ்.

அந்த சூட்டிங் ஸ்பாட்டில் அவர் உட்காந்து நான் பார்த்ததே இல்ல சார். அவருக்கும் பாலசந்தர் சாருக்கும் ஒரே மாதிரிதான் கை இருக்கும். அந்த அமைப்பு மூவ் மெண்ட் எல்லாம் கே.பி சார பாக்குற மாதிரியே இருக்கும். முதல் நாள் சூட்டிங்கில் எம்எஸ்வி யை வைத்து தான் முதல் ஷாட் எடுத்தேன். கே.பி சார்தான் முதல் நாள் ஸ்டார்ட் சொல்லி கேமராவ ஆன் பண்ணார். எம்எஸ்வி மெஸ்ல இருந்து திரை சீலை விலக்கி விட்டு கரண்டியை ஆட்டிட்டு வந்தார். ரொம்ப அபாரமா பண்ணார். என்று எம்எஸ்வி குறித்து இயக்குநர் சரண் சிலாகித்து பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.