Seshu Emotional: 'செத்துச் சுண்ணாம்பாகி நடிச்சிருக்கோம்.. அந்த சேனல் ஒன்னுமே செய்யல': லொள்ளுசபா சேஷூவின் கடைசி பேட்டி
Actor Seshu Emotional: லொள்ளு சபாவில் நடித்தவர்களுக்காக ஒரு சின்ன அங்கீகாரம் மற்றும் விருதுகள்கூட கிடைத்தது இல்லை எனவும்; செத்துச் சுண்ணாம்பு ஆகி விடிய விடிய நடித்திருக்கிறோம் என்றும் நடிகர் சேஷூ அளித்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.

Actor Seshu Emotional: செத்துச் சுண்ணாம்பாகி நடித்திருக்கிறோம் என்றும்; தான் பணிபுரிந்த அந்த சேனலில் இருந்து ஒன்றுமே செய்ததில்லை என நடிகர் லொள்ளுசபா சேஷூ அளித்த கடைசி பேட்டி வைரல் ஆகி வருகிறது.
நடிகர் லட்சுமி நாராயணன் சேஷூ உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்டப் படங்களில் நடித்து இருந்தநிலையில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் சற்றுமுன், மாரடைப்புக் காரணமாக நடிகர் சேஷூ காலமனார்.
மாரடைப்புக் காரணமாக, கடந்த 15ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சேஷூ, இன்று இல்லத்திற்குச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரை நீக்கியதும் அவரது உயிர் பிரிந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மிகவும் கண்கலங்கி நடிகர் சேஷூ சினி உலகம் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நிறைய தான் பட்ட புறக்கணிப்புகளை வலியோடு பதிவு செய்திருக்கிறார்.
அதில் அவர் அளித்த பேட்டியில், ‘’நிறைய சேனல்களில் நான் பண்ணியிருக்கேன். கங்கா யமுனா சரஸ்வதி, கோகிலா எங்கே போகிறாள் போன்ற 20 வருஷத்துக்கு முன்னாடி வந்த சீரியல்களில் எல்லாம் நடிச்சிருக்கேன். லொள்ளு சபா, இந்த அளவுக்கு ரீச், இந்த அளவுக்கு பிரபலம் ஆனதுக்கு முக்கிய காரணம் என்னவென்றால், இன்னும் யூடியூபில் லொள்ளு சபா வீடியோக்கள் இருக்கின்றன.
தனியார் டிவி புரோகிராம்கள் எல்லாம் யூடியூபில் இருப்பதால் தான் பெரியளவில் ரீச். அந்த லொள்ளுசபா நிகழ்ச்சிக்கு ஒருமுறை தான் பேமென்ட் வாங்கியிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு முறையும் லொள்ளு சபாவை,கிடைக்கிற கேப்பில் ரிப்பீட் செய்வார்கள். அந்தச் சேனலில் இருந்து, லொள்ளு சபாவில் நடித்தவர்களுக்காக ஒரு சின்ன அங்கீகாரம் மற்றும் விருதுகள்கூட கிடைத்தது இல்லை. செத்துச் சுண்ணாம்பு ஆகி விடிய விடிய நடித்திருக்கிறோம்.
எங்கள் டைரக்டர் மற்றும் டைரக்டரின் டிஸ்கசன் குழு தான் லொள்ளுசபா வெற்றிக்குக் காரணம். அந்தச் சேனலில் இருந்து ஒன்றுமே செய்ததில்லை. ஆயிரம்தான் சொன்னாலும், மனதில் அது ஒரு குறையாகத் தான் இருக்கு.
நடிப்பை விடுங்க. நானும் மாறனும் ரொம்ப கிளோஸ். எங்களுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் பிரிவினையாக நினைச்சது கிடையாது. அப்படி எங்களுக்குள் எப்பவும் வராது.
இன்னிக்கு நான் நல்லா இருக்கேன் என்றால், அதில் நடிகர் மாறனும் ஒரு காரணம். சத்தியமாக அதை நான் மறந்தேன் என்றால் சோறு கிடைக்காது. பிச்சை தான் எடுக்கணும். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்களை மறக்கக் கூடாது. அதேபோல், லொள்ளுசபா இயக்குநர் ராம் பாலாவை மறக்கக் கூடாது. இப்போது வாய்ப்பு கொடுக்கிற யோகி பாபுவாக இருந்தாலும் சரி, சந்தானமாக இருந்தாலும் சரி அவர்களை எல்லாம் மறக்கக்கூடாது. இவ்வளவு பெரிய வெற்றிகிடைத்ததுக்குப் பின், அப்பா சமீபத்தில் இறந்ததால் அதை முழுங்கவும் முடியாமல்,சொல்லவும் முடியாமல் போராடிட்டு இருக்கேன்.
நன்றி மறக்கக்கூடாத முக்கிய நண்பர்களில் மாறனும் ஒருவர். சைதாப்பேட்டை பக்கத்தில் ஒரு திருவிழா மேடையில் நடிச்சிட்டு இருக்கும்போது மாறன் கால் பண்ணி, சினிமாவில் நடிக்கக் கூப்பிட்டுப் போனார். 15 வருடங்களாக அந்த அன்பு தொடருது’’ என்றார், உருக்கமாக!
நன்றி: சினி உலகம் யூட்யூப் சேனல்!

டாபிக்ஸ்