‘குடும்பத்துல அந்த கவலை இருக்கு.. கேட்குறாங்க.. வருத்தம் தான்’ வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி!
‘படித்திருக்கிறேன், இடம் வாங்கியிருக்கிறேன், வீடு கட்டியிருக்கிறேன், மருத்துவமனை கட்ட இடம் வாங்கியிருக்கிறேன், யார் என்னை கேள்வி கேட்க முடியும்? நான் புரிதல் உள்ளவனாக மேலே சென்று கொண்டிருக்கிறேன். இதனால், எனக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தான், என் குடும்பத்தார் என்னை கேள்வி கேட்டார்கள்’

அம்மாவின் தங்கை எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர். அவரைப் போலவே எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. என் அம்மாவின் அம்மாவும், அந்த ஆசையை என் மனதில் பதிய வைத்தார். சின்ன வயதிலேயே நான் துறுதுறுனு இருப்பேன். ஆரம்ப பள்ளியிலேயே என்னை சக மாணவிகள் கிண்டல் செய்வார்கள். அதன் பின் 6 ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு போன பிறகு, ‘திவாகர் இல்லாட்டி என்னடா க்ளாஸ்..’ என்று மாணவர்கள் சொல்வார்கள். அந்த அளவிற்கு நான் பொழுதுபோக்கானவன். இயல்பாகவே அது என்னிடம் இருந்தது.
எந்த ஆசிரியர் வந்தாலும், அவர்களை இமிடேட் பண்ணுவேன். அதை மாணவர்கள் ரசிப்பார்கள். எனக்குத் திருமணம் ஆகவில்லை என்பதால் பெற்றோருக்கு வருத்தம் இருக்கிறது. நான் மெஜ்ஜூரா இருக்கேன். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால், வீட்டில் இருப்பவர்கள் ‘ஏம்ப்பா சீக்கிரம் முடிக்கணும்.. முடிச்சே ஆகணும்’ என்று சொல்வார்கள். சில இது வரும் போது, ‘அம்மா இது எனக்கு செட் ஆகாது.. கொஞ்சம் வெயிட் பண்ணலாம்’ என்று நான் கூறுவேன்.
என் நகைச்சுவை என் தொழிலுக்கு உதவுகிறது
என் நகைச்சுவை, என் டாக்டர் தொழிலை ஓவர்டேக் செய்வதாக நான் நினைக்கவில்லை அதை நான் ப்ளஸ் ஆக தான் பார்க்கிறேன். நான் யார் மனதையும் புண்படுத்துவதில்லை. பார்த்ததும் எல்லாரையும் கவர்ந்து இழுக்க கூடியது என் நகைச்சுவை. அது என் தொழிலை பெருமைபடுத்துகிறது. துபாய் போய் வந்தேன். அங்கு நான் அணிந்த உடைகளால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதன் மூலம் எனக்கு நிறைய நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
