Watch Video: ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..’ வெற்றிக்கொண்டாட்டத்தில் நடனமாடிய பிரியா! - வீடியோ உள்ளே!
Watch Video: படத்தில் பிரியாவிற்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும், அர்ஜூன் தாஸூடன் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’; பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்தப்படத்தில் மலையாள நடிகையாக பிரியா வாரியர் அர்ஜூன் தாஸின் காதலியாக நடித்தார். படத்தில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும், அர்ஜூன் தாஸூடன் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் பிரியா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அந்த நடனம் சம்பந்தமான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
சாமனிய ரசிகர்களுக்கு படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருந்த போதும், பெரும்பான்மையான அஜித் ரசிகர்களுக்கு படம் பிடித்திருப்பதாகவே தெரிகிறது. முதல் நாளில் 30 கோடிக்கு மேல் வசூல் செய்த குட் பேட் அக்லி படம் நேற்றைய 60 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல.
இந்தப்படத்தில் நடிகை த்ரிஷா கதாபாத்திரம் ட்ரோலுக்கு உள்ளான நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த த்ரிஷா, ‘சமூக ஊடகங்களில் உட்கார்ந்து மற்றவர்களைப் பற்றி முட்டாள்தனமான விஷயங்களை இடுகையிடுவது உண்மையில் உங்கள் நாளை உருவாக்குகிறதா? நான் உண்மையிலேயே, உங்களுக்காகவும், நீங்கள் வாழும் அல்லது சூழப்பட்ட மக்களுக்காகவும் பயங்கரமாக உணர்கிறேன்.’ என்று கூறியிருந்தார்.
கதைக்களம் என்ன?
குடும்பத்திற்காக தன்னுடைய கேங்கஸ்டர் தொழிலை விட முடிவு செய்யும் ஏகே, செய்த தவறுகளுக்காக ஜெயிலுக்கு சென்று தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார். அதே நேரம் இது தன்னுடைய மகன் விஹானுக்கு தெரியாமலும் பார்த்து கொள்கிறார். மனைவி ரம்யாவும், தாத்தாவும் அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறார்கள். விஹான் கேட்கும் போதெல்லாம் அப்பா பெரிய பிசினஸ் மேன்.. அதனால் நினைத்த போதெல்லாம் அவரால் வரமுடியாது என்று சொல்லி சமாளிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் மகனுக்காக ஏகே வெளியே வருகிறார். அந்த சமயத்தில் ஸ்பெயினில் இருக்கும் ஒரு கும்பல் விஹானை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்கிறது. விஹானை அதில் சிக்க வைத்தது யார்? அதற்கான காரணம் என்ன? ஒரு தந்தையாக விஹானை அந்த கும்பலிடம் இருந்து மீட்க ஏகே எடுத்த ரிவெஞ்ச் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் குட் பேட் அக்லி படத்தின் கதை!

டாபிக்ஸ்