தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Watch Video: Actor Dhanush Attended The Ayodhya Ram Temple Pran Pratishtha Ceremony

Watch Video: ராமா.. ராமா.. அயோத்தியில் நடிகர் தனுஷ்.. பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போலீசார் - வைரல் வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 22, 2024 07:21 PM IST

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடு முழுவதிலிருந்தும் 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ்!

ட்ரெண்டிங் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நாடு முழுவதிலிருந்தும் 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன், நடிகர் சிரஞ்சீவி ரன்பீர் கபூர் -ஆலியாபட், விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குர்ரானா, மாதுரி தீட்சித், அனுபம் கெர், கங்கனா ரனாவத், காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த விழாவில், நடிகர் தனுஷூம் கலந்து கொண்டிருக்கிறார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே தன்னுடைய 50 வது திரைப்படத்தை தானே எழுதி நடித்து முடித்திருக்கும் தனுஷ், தான் டைரக்‌ஷன் செய்யும் படத்தின் பணியையும் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் - நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தின் பூஜையும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். 

இந்தப்படத்தை தெலுங்கில் ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்களை எடுத்த தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவால் இயக்குகிறார். இந்தத்திரைப்படத்தின் பூஜை விழா அண்மையில் நடைபெற்றது. 

இந்த பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.

தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்கின்றனர்.

சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென், ஆக்‌ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.