தீபிகா - சந்தீப் விவகாரம்..‘8 மணி நேர வேலை என்பது பிரச்சினையே கிடையாது.. சொந்த குரலில் பேசும் போதுதான்’- அதிர்ச்சி தகவல்
தீபிகா படுகோனே "விரிவான பரிவார செலவுகளை" கேட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம், தீபிகா படத்திலிருந்து வெளியேறினார், அவருக்கு பதிலாக திரிப்தி டிம்ரி நடித்தார்.

தீபிகா - சந்தீப் விவகாரம்..‘8 மணி நேர வேலை என்பது பிரச்சினையே கிடையாது.. சொந்த குரலில் பேசும் போதுதான்’- அதிர்ச்சி தகவல்
சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் படத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அனிமல் படத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமான நடிகை திருப்தி டிம்ரி கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தீபிகா படுகோனே படத்தில் நடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாகவும், அதில் இயக்குநர் சந்தீப் அதிருப்தி அடைந்தே இந்த முடிவு எடுத்ததாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே சந்தீப் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தீபிகாவை மறைமுகமாக குற்றம்சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கு தீபிகாவும் மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
அதிர்ச்சி கொடுத்த தீபிகா
இந்த விவகாரம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தீபிகா மீதான குற்றச்சாட்டுகள் இணையத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன.