அஜித்தால் வேலையை விட்டு சிம்புவால் திரைக்கு வந்த விடிவி கணேஷ்.. மேலாளராய் தொடங்கி நடிகரான கதை இதோ!
அஜித்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி சிம்புவிடம் அதிக நெருக்கமானார். சிம்பு அவருடைய தோற்றம், ஹஸ்கி வாய்ஸ் போன்றவற்றை பார்த்து ஒரு படத்தில் நடிக்க வைத்தார். அது வெற்றியடைந்ததால் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த கார் ஷோரூம் மேனேஜர் தான் VTV கணேஷ்.
சினிமா உண்மையில் பலருக்கும் ஒரு மாய உலகம் தான். இங்கு திறமை இருந்தும் முன்னுக்கு வர முடியாமல் கஷ்டப்படுபவர்கள் கோடம்பாக்க தெருக்களில் வாய்ப்பு தேடி இன்றும் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சிலர் வேறு ஏதோ ஒரு வேலையில் ஓடிக்கொண்டு இருக்கும்போது சூழல் அவர்களை நடிப்புத்துறைக்கு இழுத்து வரும் அப்படி இழுத்து வரப்பட்ட பிரபலம்தான் நடிகர் VTV கணேஷ். அவர் திரைக்கு வந்த கதை குறித்து மூத்த பத்திரிகையாளர் வி.கே சுந்தர் தனது V K Sundar Updates என்ற யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
அஜித்தின் வாலி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் பாட்டு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஏதோ ஒன்று குறைகிறது என கேமரா மேன் ஜீவா சொல்கிறார். அதனால் அன்று நார்மலாக சில ஷாட்டுகள் மட்டும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் போது ஜீவா எனக்கு பத்து கார் வேண்டும் என்று கேட்கிறார்.
அன்றைய கால கட்டத்தில் இப்போது இருப்பதுபோல் ஹையர்எண்ட் கார் எல்லாம் இல்லை. அப்போது அதிக பட்சம் அம்பாசிட்டர் கார்தான். அதை தாண்டி நடிகர்கள் அரசியல் வாதிகள் மட்டும் தான் வேற மாடலில் காஸ்ட்லி கார்கள் வைத்திருப்பார்கள். அஜித்தே அம்பாசிட்டர் கார்தான் நீண்ட நாட்கள் பயன்படுத்தி வந்தார். அந்த கால கட்டத்தில் தான் ஜீவா 10 அம்பாசிட்டர் கார் கேட்டார்.‘
கார் கம்பெனி மேனேஜர்
உடனே புரொடக்ஷன் மேனேஜர் அம்பாசிட்டர் கார் ஷோ ரூம் எங்கே இருக்கிறது என்று தேடினார். அப்போது மெயின் பிராஞ்சிற்கு சென்று மேனேஜரிடம் பேசி 10 காரை தினமும் ஸ்பாட்டுக்கு கொண்டு வர செய்தார். அந்த பாடலில் காரின் பின் லைட் மட்டும் பிளிங்க் ஆகி கொண்டே இருக்கும். அந்த பாடல் எடுத்த நாட்களில் அந்த அம்பாசிட்டர் கார் நிறுவனத்தில் பணியாற்றிய மேனேஜர் தினமும் அஜித், கேமரா மேன் ஜீவா எல்லோரிடமும் பேசி கொண்டிருக்கிறார்.
சிம்புவால் திரைக்கு வந்த மேனேஜர்
அஜித்திற்கு கார் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த மேனேஜரிடம் கார் குறித்து அதிகமாக பேசிக்கொண்டிருப்பார். அந்த பட பிடிப்பு முடிந்த பின்னரும் அஜித் அந்த மேனேஜருடன் தொடர்ந்து தொடர்பில் இருத்தார். கார் குறித்து அடிக்கடி பேசுவார். ஏதாவது கார் வாங்குவது என்றால் அவரிடம் சொல்லி வாங்குவது போன்று தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார். ஒரு கட்டத்தில் அதுவே ஒரு பெரிய வேலையாகி அந்த மேனேஜர் ஷோரூமில் இருந்து வேலையை விட்டு வெளியில் வந்து நீண்ட நாட்கள் அஜித்துடன் இருந்தார். பின்னர் அஜித்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி சிம்புவிடம் அதிக நெருக்கமானார். சிம்பு அவருடைய தோற்றம், ஹஸ்கி வாய்ஸ் போன்றவற்றை பார்த்து ஒரு படத்தில் நடிக்க வைத்தார். அது வெற்றியடைந்ததால் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த கார் ஷோரூம் மேனேஜர் தான் VTV கணேஷ்.. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடிவி கணேஷ் இவர் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். தனது கரகரப்பான குரலால் தனித்து அறியப்படுபவர். சிலம்பரசனுடன் நடித்த திரைப்படங்களாலும் ரசிகர்களிடயே பெரிதும் கொண்டாடப்பட்டார். தான் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நன்கு பரிச்சயமானார். எதார்த்தமான நடிப்பாலும் குரலாலும் இவரை மக்கள் கொண்டாடுகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
தொடர்புடையை செய்திகள்