Baakiyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரயலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்! புதிதாக காத்திருக்கும் சார்ப்ரைஸ்
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த விஜே விஷால், அந்த தொடரிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது அவரது கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்தும் சர்ப்ரைஸ் நிலவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலாக பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. நாள்தோறும் இரவு 8.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பதுடன், டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் தொடராக இருந்து வருகிறது.
இதையடுத்து இந்த தொடரில் எழில் என்ற கதாபாத்திரத்திலும், பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தின் இரண்டாவது மகனாக நடித்து வந்த விஜே விஷால், விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
நிஜமான வதந்தி
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே எழில் இந்த தொடரை விட்டு விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்போது இதுதொடர்பாக வாய் திறக்காமல் இருந்த வந்த விஜே விஷால், தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இவரது விலகலுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் சிலர் அவருக்கு எதிர்கால பயணம் நன்றாக அமைய வேண்டும் என ஆதரவைு கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
விஷால் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருந்து வரும் விஷால் கதாபாத்திரத்தில் தற்போது நடிக்க போவது யார் என்ற கேள்வியும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கதபாத்திரத்தில் நடிகர் நவீன நடிக்கலாம் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியானாலும் பாக்யலட்சுமி சீரியலில் விரைவில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
டிஆர்பியில் கலக்கும் பாக்கியலட்சுமி
2020 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டைட்டில் கதாபாத்திரத்தில் சுசித்ரா ரெட்டி நடித்து வருகிறார். சதீஷ் குமார், கோபி என்ற கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி கணவராகவும், ரேஷ்மா பசுபுலேட்டி, கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சினிமா நடிகர் ரஞ்சித்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மனைவி பாக்யாவை விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்யும் கோபி, ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இதில் குடும்பத்தினரிடையே நடக்கும் உணர்ச்சி போராட்டமும், உறவு சிக்கலும்தான் இந்த சீரியலின் மையக்கதையாக அமைந்துள்ளது.
விஜய் டிவியின் சீரயல்களில் அதிக டிஆர்பியை பெறும் சீரியலாக பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் அதிகம் பேரால் ஸ்டீரிம் செய்து பார்க்ககூடிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி இருக்கிறது.
விஜே விஷால்
டிவி சீரியலில் நடிகராக ஆவதற்கு முன்னர் டிவி நிகழ்ச்சியில் விஜேவாக தோன்றி பிரபலமானவர் விஷால். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற விஷால், ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியில் இணை தொகுப்பாளராகவும் தோன்றியுள்ளார்.
அவர் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இந்த சீரியல் விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த சூழ்நிலையில் அவர் திடீரென விலகியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.