Baakiyalakshmi Serial: பாக்கியலட்சுமி சீரயலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்! புதிதாக காத்திருக்கும் சார்ப்ரைஸ்
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த விஜே விஷால், அந்த தொடரிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது அவரது கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்தும் சர்ப்ரைஸ் நிலவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலாக பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. நாள்தோறும் இரவு 8.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருப்பதுடன், டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் தொடராக இருந்து வருகிறது.
இதையடுத்து இந்த தொடரில் எழில் என்ற கதாபாத்திரத்திலும், பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தின் இரண்டாவது மகனாக நடித்து வந்த விஜே விஷால், விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
நிஜமான வதந்தி
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே எழில் இந்த தொடரை விட்டு விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்போது இதுதொடர்பாக வாய் திறக்காமல் இருந்த வந்த விஜே விஷால், தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இவரது விலகலுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் சிலர் அவருக்கு எதிர்கால பயணம் நன்றாக அமைய வேண்டும் என ஆதரவைு கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.