Jayam Ravi: ஒருவேள இருக்குமோ? பேரை மாற்றியதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? வெளியான வீடியோ ஆதாரம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi: ஒருவேள இருக்குமோ? பேரை மாற்றியதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? வெளியான வீடியோ ஆதாரம்..

Jayam Ravi: ஒருவேள இருக்குமோ? பேரை மாற்றியதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? வெளியான வீடியோ ஆதாரம்..

Malavica Natarajan HT Tamil
Jan 14, 2025 04:49 PM IST

Jayam Ravi:நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை மாற்றியதற்கான காரணம் இதுதான் என பிரபல யூடியூப் வீடியோ ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Jayam Ravi: ஒருவேள இருக்குமோ? பேரை மாற்றியதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? வெளியான வீடியோ ஆதாரம்..
Jayam Ravi: ஒருவேள இருக்குமோ? பேரை மாற்றியதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? வெளியான வீடியோ ஆதாரம்..

இனி ஜெயம் ரவி வேண்டாம்

இந்நிலையில், இனி தன்னை யாரும் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கலாம் எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தனது பெயரை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் எனவும் ரவி அல்லது ரவி மோகன் எனவும் அழைத்தால் போதும் எனவும் கூறியுள்ளார். இவரின் இந்த முடிவு குறித்து பலரும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர்.

ரசிகர்களின் கருத்து

பலரும் இவரது முடிவுக்கு வரவேற்பு கொடுத்தனர். சிலர் படம் ரிலீஸ் சமயத்தில் செய்யும் சில வேளைகளில் இதுவும் ஒன்று என விமர்சித்தனர்.

இந்த சமயத்தில் சிலர் நடிகர் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை படத்தின் புரொமோஷனுக்காக யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாகவும் அங்கு நடந்த உரையாடலில் தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

மொட்டைமாடி பார்ட்டி

தமிழ் யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலமானவர் விஜே சித்து. இவர் நண்பர்களுடன் செய்யும் சேட்டைகளைக் காணவே பலரும் காத்திருக்கின்றனர். மக்களின் ஸ்ட்ரஸ் பஸ்டராக இருக்கும் இவர்களது யூடியூப் சேனலின் ஒரு நிகழ்ச்சி தான் மொட்டைமாடி பார்ட்டி.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் புரொமோஷனுக்காக வரும் நடிகர்கள் அனைவரையும் லுங்கியுடன் உட்கார வைத்து பல விஷயங்கள் குறித்து தங்களுக்கே உரித்தான பாணியில் பேசி கலாய்த்து தள்ளுவர்,

சிக்கிய ஜெயம் ரவி

அந்த வகையில் மொட்டைமாடி பார்ட்டி நிகழ்ச்சிக்கு சென்ற ஜெயம் ரவியிடம், விஜே சித்து, எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம் இருக்கிறது. உங்கள் பெயர் ஏன் இன்னும் ஜெயம் ரவி என இருக்கிறது. ஜெயம் படம் எடுத்தே 20 வருடம் மேல் ஆகிவிட்டது.

இன்னும் ஏன் அதே பெயர். உங்கள் பெயரை இப்போதுள்ள ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி மாற்றலாம் எனக்கூறி, ஹர்சத்கானுடன் இணைந்து தீவிரமாக பேசி வந்தார்.

ட்ரெண்டிங் பெயர்

காதலிக்க நேரமில்லை படம் வருவதால் நேரமில்லை ரவி என மாற்றலாம் என்றும். என் எம் ரவி அதாவது நேரமில்லை என்பதை அப்படியே சொன்னால் படவாய்ப்பு வராது என்பதற்காக அதனை சுறுக்கி என் எம் ரவி என வைக்கலாம். தமிழில் வந்தால் அது எண்ணம் ஆக மாறிவிடும் எனப் பேசி ஜெயம் ரவியை கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

எனக்கு ரவியே போதும்

இதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஜெயம் ரவி, போதும்பா என்ன விட்ருங்க. எனக்கு எதுவுமே வேணாம். வெறும் ரவியே போதும் என்று கூறி அந்த உரையாடலையே நிறுத்தி இருப்பார்.

இந்த வீடியோ தற்போது வெளியான நிலையில், பலரும் இதுதான் ஜெயம் ரவியின் பெயர் மாற்றத்திற்கு காரணமா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.