நீ எல்லாம் பொறந்ததே ஒரு சாபக்கேடு.. கேவலமான பிறப்பு.. விஜே மணிமேகலைக்கா இந்த நிலைமை..!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நீ எல்லாம் பொறந்ததே ஒரு சாபக்கேடு.. கேவலமான பிறப்பு.. விஜே மணிமேகலைக்கா இந்த நிலைமை..!

நீ எல்லாம் பொறந்ததே ஒரு சாபக்கேடு.. கேவலமான பிறப்பு.. விஜே மணிமேகலைக்கா இந்த நிலைமை..!

Malavica Natarajan HT Tamil
Dec 28, 2024 09:46 AM IST

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில் வரும் வருடம் தனக்கு எப்படி இருக்கும் என கணித்துள்ளார் மணிமேகலை.

நீ எல்லாம் பொறந்ததே ஒரு சாபக்கேடு.. கேவலமான பிறப்பு.. விஜே மணிமேகலைக்கா இந்த நிலைமை..!
நீ எல்லாம் பொறந்ததே ஒரு சாபக்கேடு.. கேவலமான பிறப்பு.. விஜே மணிமேகலைக்கா இந்த நிலைமை..!

மணிமேகலை காதல் திருமணம்

அப்போது, அவர் ஹூசைன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு வாழ்வில் பல இக்கட்டான சூழல்களை கடந்து பயணித்து வந்தார்.

பின், யூடியூப் சேனல்களுக்கு தொகுப்பாளராக சென்று கொண்டிருந்த மணிமேகலைக்குள் ஒளிந்திருந்த குறும்புத் தனத்தை கண்டுபிடித்து அதை வெளிக்கொண்டுவர நினைத்தது விஜய் டிவி.

கோமாளி மணிமேகலை

அப்போது தான் அவர் விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக செய்த சேட்டைகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். இதையடுத்து, அவருக்கு மிகப்பெரும் ரசிகர் கூட்டம் உருவாகும் அளவிற்கு அவரை மக்கள் ரசிக்கத் தொடங்கினர்.

பிரியங்காவுடன் பிரச்சனை

இந்நிலையில் தான், அவர் குக் வித் கோமாளி சீசன் 5வில் தொகுப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். இருந்தாலும், அவருக்குள் இருக்கும் அந்த காமெடி குறையாமல் பார்த்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடித்தி வந்தார். ஆனால், அது நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

5வது சீசனில் போட்டியாளராக வந்த பிரியங்கா தேஷ்பாண்டே தன் வேலைகளையும் சேர்த்து அவரே செய்கிறார். அனைவரும் அவருக்கே ஆறுதல் அளிக்கின்றனர். என்னால் பிச்சை எடுத்து கூட பிழைக்க முடியும் ஆனால் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறி விட்டார்.

விமர்சனத்திற்குள்ளான மணிமேகலை

இது அவரது வாழ்க்கையை மீண்டும் ஆட்டம் காண வைத்தது. இவருக்கு எதிராக பல கருத்துகளும் விமர்சனங்களும் வந்து கொண்டிருந்த சமயத்தில் மணிமேகலை அவர்களையும் விமர்சிக்கத் தொடங்கியதில் அவர் மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது..

இருப்பினும், இவற்றில் இருந்து துவண்டுவிடாமல் தன் வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார் மணிமேகலை. கணவர் ஹுசைனுடன் வீடியோ போடுவது, யூடியூப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டார்.

மேலும், சமீபத்தில் அவர் புதிதாக வீடு கட்டி அதில் குடியேறினார். இதுகுறித்து இன்ஸ்டகிராமில் கருத்து தெரிவித்திருந்த மணிமேகலை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி, எந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது தான் எங்களை வலிமையாக்கியது. எங்கள் கனவு நம்பிக்கையை அளித்தது என பெருமிதம் கொண்டார்.

நீ பொறந்ததே சாபக்கேடு

இப்படி வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் மணிமேகலை, 2025ம் ஆண்டு தனக்கு எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோவை கணவர் ஹுசைனுடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கணவர் ஹுசைனுக்கு 2025ம் ஆண்டு அமோகமாக இருப்பது போன்ற வசனங்களும், மணிமேகலைக்கு நீ எல்லாம் பொறந்ததே ஒரு சாபக்கேடு என்ற எம்.எஸ்.பாஸ்கர் வசனத்தையும் வைத்து வீடியோ வெளியிட்டிருத்கிறார். இதற்கு பலரும் பல வருஷமா அப்படி தான் போயிட்டு இருக்கு என கமெண்ட் எல்லாம் போட்டு வருகின்றனர். இவரின் இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.