தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vj Bhavana: 10 வருடமாக அந்த விஷயத்திற்கு கணவரை வெயிட் பண்ண வைத்த தொகுப்பாளினி பாவனா!

VJ Bhavana: 10 வருடமாக அந்த விஷயத்திற்கு கணவரை வெயிட் பண்ண வைத்த தொகுப்பாளினி பாவனா!

Aarthi Balaji HT Tamil
May 29, 2024 08:21 AM IST

VJ Bhavana: பாவனா தன் கணவருடன் நேரம் செலவு செய்ய முடியாதது குறித்து பேசி உள்ளார். இந்த உலகத்தில் அவ்வளவு வேறுபாடு இருப்பதை அவர் புரிந்து கொண்டதால் தான் ஏற்றுக் கொள்கிறார். அவ்வளவு இயல்பாக எடுத்து கொள்கிறார் என்றார்.

10 வருடமாக அந்த விஷயத்திற்கு கணவரை வெயிட் பண்ண வைத்த தொகுப்பாளினி பாவனா!
10 வருடமாக அந்த விஷயத்திற்கு கணவரை வெயிட் பண்ண வைத்த தொகுப்பாளினி பாவனா!

ட்ரெண்டிங் செய்திகள்

தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட முகமான பிறகு, பாவனா கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் தொகுப்பாளராக மாறினார். ராஜ் டிவியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக தனது தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

விஜய் டிவி தொகுப்பாளினி

பாவனா பின்னர் ஸ்டார் விஜய் டிவியில் சேர்ந்து அந்த சேனலின் முழு நேர தொகுப்பாளினி ஆனார். விஜய் டிவியில் இவரது முதல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். பாவனா, சேனலில் சூப்பர் சிங்கர் மற்றும் ஜோடி நம்பர் ஒன் ஷோ ஃபன் அன்லிமிடெட் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

மாயாண்டி லாங்கருக்குப் பிறகு, பாவனா இந்தியாவின் மிகவும் பிரபலமான விளையாட்டு பத்திரிகையாளர்களில் ஒருவராக மாறினார். அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஐபிஎல், உலகக் கோப்பை டி20, நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடர், அத்துடன் புரோ லீக் கால்பந்து, கபடி, கைப்பந்து மற்றும் பலவற்றை தொகுத்து வழங்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டில், இரண்டு பெண் வர்ணனையாளர்கள் மட்டுமே ஐபிஎல் போட்டியை தொகுத்து வழங்கினர். அதில் ஒருவராக பாவனாவின் கிரிக்கெட் வர்ணனை ரசிகர்களை கவர்ந்தது.

சினிமா தொடர்பான ஆடியோ வெளியீட்டு விழாக்கள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் விருது விழாக்களையும் தொகுத்து வழங்குகிறார் . சமீபத்தில் கூட பாவனா மாஸ்டர், லீடர், ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

தொழிலதிபரை திருமணம் செய்து மும்பையில் குடியேறிய பாவனா , அதன் பிறகு விஜய் டிவியில் வரவில்லை .

10 வருட திருமண வாழ்க்கை

இதனிடையே பாவனா தன் கணவருடன் நேரம் செலவு செய்ய முடியாதது குறித்து பேசி உள்ளார். அதில், “ என் கூட ஒரு விடுமுறை செலவு செய்ய அவ்வளவு தவித்து இருக்கிறார். இந்த 10 வருட திருமண வாழ்க்கையில். அவரின் நண்பர்கள், அவருடன் வேலை செய்யும் நபர்களை பார்க்க போக வேண்டும் என்றாலும் என்னுடைய இருப்பை கடைசி வரை அவரால் உறுதியாக சொல்ல முடியாது. 

அவர் கேட்பார் அடுத்த மாதம் என்ன பண்ண போறீங்க என்பார். அவர்களின் தொழில் வாழ்க்கையில் அனைத்துமே கேலண்டரில் குறித்து வைத்து கொள்வார்கள். அடுத்த மாதம் 20 ஆம் தேதி நாம் அனைவரும் மீட் செய்ய வேண்டும் என குறித்து வைத்து கொள்வார்கள்.

உலகத்தில் அவ்வளவு வேறுபாடு

அவர்கள் அதற்காக அனைத்தையும் ஒதுக்கி வைத்து இருப்பார்கள். ஆனால் நமக்கு ஆடிக்கும், அமாவாசைக்கும் ஒரு முறை தான் வேலை வருகிறது. பெரிய வேலை வரும் போது நம்மால் அதை ஒதுக்கியும் வைக்க முடியாது. இந்த உலகத்தில் அவ்வளவு வேறுபாடு இருப்பதை அவர் புரிந்து கொண்டதால் தான் ஏற்றுக் கொள்கிறார். அவ்வளவு இயல்பாக எடுத்து கொள்கிறார்.

சில நேரத்தில் கோபம் வர தான் செய்யும். போ டி என சொல்லிவிட்டு ஜாலியாக கடந்துவிடுவார். பொசசிவ் தான் அவர். ஆனால் ரொம்ப பொசசிவ் கிடையாது. ஒரு காதல் வாழ்க்கைக்கு அது மிகவும் முக்கியமானது என்று தான் சொல்ல வேண்டும் “ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்