‘ ஷங்கர் சார் சொன்னது உண்மைதான்.. அவர் செஞ்ச புண்ணியம்தான் எங்கள இன்னைக்கு..’ - விவேக் இறப்பு குறித்து நெகிழ்ந்த மனைவி!
அந்த சமயத்தில் ஷங்கர் சார் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். இதற்கிடையே விவேக் சாருக்கு இப்படி ஆனது அவருக்கு பேரிடியாக அமைந்தது. விவேக் சார் இறப்புக்கு வீட்டிற்கு வந்த அவர், எல்லோரையும் போல தைரியமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். - விவேக் மனைவி!
விவேக் சார் கமல் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அந்த சமயத்தில் எல்லோரையும் போல, அந்தப்படத்தின் இயக்குநர் ஷங்கர், விவேக் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த சந்திப்பு குறித்து விவேக் மனைவி அருள் செல்வி அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, ‘விவேக் சார் இறந்த பிறகு, அவர் நடிப்பில் வெளியான லெஜண்ட் மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் நான் பார்க்கவில்லை. உண்மையில் சொல்லபோனால், எனக்கு பார்ப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இந்தியன் 2 திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த பொழுது, அதில் நடந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். கொரோனாவால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. கிரேன் விழுந்து துணை இயக்குனர்கள் உயிரிழந்த விவகாரத்திலும், படப்பிடிப்பு நின்றது. இதற்கிடையே விவேக் சாரும் இறந்து விட்டார்.
ஷங்கருக்கு பேரிடி
அந்த சமயத்தில் ஷங்கர் சார் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். இதற்கிடையே விவேக் சாருக்கு இப்படி ஆனது அவருக்கு பேரிடியாக அமைந்தது. விவேக் சார் இறப்புக்கு வீட்டிற்கு வந்த அவர், எல்லோரையும் போல தைரியமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். அதன்பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவர் விவேக் சார் செய்த புண்ணியம் இந்த குடும்பத்தை காப்பாற்றும் என்று சொல்லிவிட்டு சென்றார். உண்மையில் அந்த புண்ணியம் தான் எங்களை இன்று வரைகாப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
பொதுவாகவே நான் எல்லா படங்களையும் பார்க்க வேண்டும் என்று ஆர்வப்படுவதில்லை. முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்தால், அந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அதில் நடித்த நடிகர்களின் குடும்பம் மொத்தமும் வந்து படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லை. இதற்காகவே நாம் தனியாக நேரம் ஒதுக்கி தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்க வேண்டும். ஆனால், இப்போது என்னுடைய முழு வாழ்க்கையும் பயங்கர பிசியாக சென்று கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சில சீன்களை பார்ப்பதோடு நின்று விடுகிறது. அவரது குழந்தைகள் ஓடிடி தளத்தில் இந்தியன் 2 படத்தை பார்த்தார்கள்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்