தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 Years Of Mundasupatti: குறும்படமாக வெளிவந்து சினிமாவாக உருவான படம்! மூடநம்பிக்கையை பகடி செய்த முண்டாசுபட்டி

10 Years of Mundasupatti: குறும்படமாக வெளிவந்து சினிமாவாக உருவான படம்! மூடநம்பிக்கையை பகடி செய்த முண்டாசுபட்டி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 13, 2024 06:45 AM IST

கேமராவில் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்ற மூடநம்பிக்கையை பகடி செய்த முண்டாசுபட்டி படம் பீரியட் காமெடி படமாக வெளியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதலில் குறும்படமாக வெளிவந்து சினிமாவாக உருவான படம் ஆக இது உள்ளது.

குறும்படமாக வெளிவந்து சினிமாவாக உருவாகி, மூடநம்பிக்கையை பகடி செய்த முண்டாசுபட்டி படம்
குறும்படமாக வெளிவந்து சினிமாவாக உருவாகி, மூடநம்பிக்கையை பகடி செய்த முண்டாசுபட்டி படம்

பீரியட் காமெடி படம்

தமிழ் சினிமாவில் இந்த படம் வெளியான காலகட்டத்தில் ஏராளமான பீரியட் சினிமாக்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தன. பீரியட் சினிமாக்களின் ட்ரெண்டாக இருந்த அந்த காலகட்டத்தில் பிரீயட் காமெடி படமாக முண்டாசுபட்டி படத்தை உருவாக்கியிருப்பார்கள்.

கேமராவில் போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்று மக்களிடம் இருந்த மூட நம்பிக்கையை பகடி செய்யும் விதமாக முண்டாசுபட்டி என்ற குறும்படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்தின் கதையை வைத்து இயக்குநர் வாய்ப்பை பெற்ற முண்டாசுபட்டி இயக்குநர் ராம்குமார், அதை திரைப்படமாக உருவாக்கும்போது கேமரா புகைப்படம் விஷயத்துடன், கொஞ்சம் காதல், மற்றொரு மூடநம்பிக்கையான விஷயமாக வானில் இருந்த விழுந்த எரிக்கல்லை தெய்வமாக வணங்கும் ஊர் என்பதை சேர்த்து வயிறை புண்ணாக்கும் விதமாக காமெடி படமாக உருவாக்கியிருந்தார்.

குறும்படம் போல் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட், முண்டாசுபட்டி ராமதாஸ், ஆனந்தராஜ், கஜராஜ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

ரசிகர்களை கவர்ந்த முனிஸ்காந்த்

இந்த படத்தில் இடம்பெறும் முனிஸ்காந்த் என்ற கதாபாத்திரம் திருப்பமுனை தரும் விதமாக இருந்ததோடு, ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட கேரக்டராகவே அமைந்திருந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் பின்னர் முண்டாசுபட்டி ராமதாஸ் என்ற அழைக்கப்பட்டார். இவரது டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் பெரிய அளவில் பட ரிலீசின்போது பேசப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனந்தராஜ் வில்லனிசம் கலந்த காமெடி கதாபாத்திரத்தில் சிரிக்க வைத்திருப்பார்.

பாடல்கள், பின்னணி இசைக்கு வரவேற்பு

சீன ரோல்டன் இசையில் படத்தில் இடம்பிடித்த காதல் கனவே என்ற மெலடி பாடலும், ராசா மகராசா என்ற பாடலும் ஹிட்டானது. பின்னணி இசையும் படத்தின் திரைக்கதை, காட்சியமைப்பின் விறுவிறுப்புக்கு ஏற்ப அமைந்திருந்தன.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த முண்டாசு பட்டி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்தது. குறும்படத்தில் இருந்து பெரும்படமாக கோலிவிட்டினருக்கு புதிய ட்ரெண்டை அமைத்து கொடுத்த படங்களில் முண்டாசுபட்டி படமும் முக்கிய பங்களிப்பை தந்தது. கேமராவை பார்த்தலே பலரையும் ஓட வேண்டும் என்ற மூடநம்பிக்கை விஷயத்தை பகடி செய்து சிரிக்க வைத்த, இந்த படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்