தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  9 Years Of Indru Netru Naalai: டைம் டிராவல் என்ற புது அனுபவம்! தமிழில் சயின்ஸ் பிக்‌ஷன் கதைகளுக்கான கதவுகளை திறந்த படம்

9 Years of Indru Netru Naalai: டைம் டிராவல் என்ற புது அனுபவம்! தமிழில் சயின்ஸ் பிக்‌ஷன் கதைகளுக்கான கதவுகளை திறந்த படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 26, 2024 06:30 AM IST

டைம் டிராவல் என்ற புது அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்ததோடு, தமிழில் சயின்ஸ் பிக்‌ஷன் கதைகளுக்கான கதவுகளை திறந்த படமாக நேற்று இன்று நாளை உள்ளது.

மிழில் சயின்ஸ் பிக்‌ஷன் கதைகளுக்கான கதவுகளை திறந்த படம்
மிழில் சயின்ஸ் பிக்‌ஷன் கதைகளுக்கான கதவுகளை திறந்த படம்

தமிழில் வெளியான சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படங்களில் முக்கிய படமாகவும், ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாகவும் இருந்து வருகிறது இன்று நேற்று நாளை. சயின்ஸ் பிக்‌ஷன் கதையாக இருந்தாலும் காமெடியான திரைக்கதையுடன் உருவாக்கி ரசிக்க வைத்திருப்பார் படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார். இந்த படம் இவரது அறிமுக படமாகும்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பிரபலமாகி இயக்குநர் ஆனவர்களில் இவரும் ஒருவராக உள்ளார். ஏற்கனவே நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் இயக்குநரான நலன் குமாரசாமி இயக்கிய சூது கவ்வும் படத்தில் அவரது உதவியாளராக ஆர். ராம்குமார் பணியாற்றினார். பின்னர் தான் நேற்று இன்று நாளை மூலம் இயக்குநர் ஆனார்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.