தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vishnu Vishal Opens About Clash Between Him And Actor Soori

Vishnu Vishal : மூன்றாவது நபரால் தூண்டப்பட்ட பிரச்னை.. விஷ்ணு விஷால், சூரி இடையே ஏற்பட்ட பிளவு ஏன்?

Aarthi Balaji HT Tamil
Feb 09, 2024 06:44 AM IST

இந்துஸ்தான் டைம்ஸுடனான பிரத்யேக பேட்டியில், விஷ்ணு விஷால், லால் சலாம் திரைப்படம், வாழ்க்கை பலவற்றைப் பற்றி மனம் திறக்கிறார்.

விஷ்ணு விஷால்!
விஷ்ணு விஷால்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் இருவருக்குள்ளே இருந்த நட்பு முறிந்து போனது அப்பட்டமாக தெரிந்தது. தற்போது விஷ்ணு நடிப்பில் வெளியாக இருக்கக்கூடிய லால் சலாம் படம் தொடர்பாக, அவர் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இந்துஸ்தான் டைம்ஸுடனான பிரத்யேக பேட்டியில், அவர் திரைப்படம், வாழ்க்கை பலவற்றைப் பற்றி மனம் திறக்கிறார்.

கேள்வி: உங்களுக்கும் சூரிக்கும் ஒரு பிரச்னை இருந்தது, ஆனால் நீங்கள் இருவரும் அவை அனைத்து பேசி சேர்ந்துவிட்டது போல் தெரிகிறது?

அவர் கூறுகையில், “ ஆம், எங்களிடம் உள்ளது. நாம் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு இதை இழுத்துச் செல்லலாம் அல்லது ஒட்டுப்போட்டு முன்னேறலாம் என்று நான் அவரிடம் சொன்னேன். நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம். 

பின்னர் முழு பிரச்னையும் மூன்றாவது நபரால் தூண்டப்பட்டது என்பதை உணர்ந்தோம். எங்களைச் சந்தித்து தீர்த்துக் கொள்ளச் சொன்ன ஒரு பொதுவான நண்பருக்கு நன்றி. மற்றவர்கள் மூலம் பேசுவதை விட ஒருவருக்கொருவர் நேரடியாக பேசும்போது மட்டுமே விஷயங்கள் தெளிவாகின்றன. நாங்கள் மீண்டும் நண்பர்களாகிவிட்டோம், இது தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் “ என்றார். 

முன்னதாக இது தொடர்பாக கலாட்டா சேனலில் பேசிய விஷ்ணு விஷால், “எனக்கும் சூரிக்கும் இடையே என்ன நடந்தது என்பது குறித்தான விவரங்கள் கூடிய சீக்கிரமே வெளி வரும். என்னுடைய வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்கள் மிக மிக கடினமானவையாக இருந்தன. ஆம், அந்த காலக்கட்டத்தில்தான் என்னுடைய முன்னாள் மனைவியுடன் எனக்கு விவாகரத்து ஏற்பட்டது. சூரிக்கும் எனக்கும் இடையேயான பிரச்சினை பெரும் சர்ச்சையாக வெடித்தது.

எல்லாமே ஒரே சமயத்தில் தவறாக நடக்கும் என்று சொல்வார்கள் இல்லையா? அப்படித்தான் அதுவும் நடந்தது. ஆனால் அது எல்லாமே தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இங்கு தவறு செய்யாத மனிதர்களை கிடையாது!.

ஆனால் அவர்கள் அந்தளவு கோபப்படும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய தவறு செய்யவில்லை... தற்போது எல்லாமே முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது சூரிக்கும் எனக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கிறது. அவர் என்னுடைய பையன் ஆர்யன் குறித்து கேட்பார்.

நாம் கோபத்தை நம் மனதுக்குள்ளேயே வைத்திருந்தால்,அது நம்மை வேறொரு மனிதராக மாற்றி விடும்.சூரி உடனான பிரச்சனையில் நானும் அவரும் உட்கார்ந்து பயங்கரமாக பேசினோம். அப்போது எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் ஒத்துக் கொண்டோம்.

பிரச்சினை என்று ஒன்று வந்து விட்டால், என் மீது உள்ள தவறுக்கு நான் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பேன். அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில், அதையும் எடுத்துக்காட்டுவேன். அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதற்காக மன்னிப்புக் கேட்கவும் நான் தயங்கமாட்டேன்.

கண்டிப்பாக அவருடன் நான் தொடர்ந்து படங்கள் நடிப்பேன். எங்கள் இருவருக்குள்ளும் நடந்த விஷயங்களை மறந்து நாங்கள் தற்போது நன்றாகவே பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.