Tamil News  /  Entertainment  /  Vishnu Vishal Latest Interview About Her First Wife Rajini And Jwala Gutta

Vishnu Vishal: ‘ரஜினி ரஜினிக்கே அடித்த போன் கால்.. 2 வது மனைவி ஜூவாலாதான் எல்லாமே’ - விஷ்ணு எமோஷனல்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 12, 2024 05:30 AM IST

அதற்கு ரஜினி உண்மையில் அவரும் நானும் நன்றாகவே பேசிக் கொள்கிறோம். மகன் ஆர்யனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆகையால் தாராளமாக செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார்.

விஷ்ணு விஷால்!
விஷ்ணு விஷால்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதலில் இருந்த விஷ்ணு, கடந்த 2021ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த இரு வாழ்க்கை அனுபவங்கள் குறித்து விஷ்ணு கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்தார்.

அவர் பேசும் போது, “ ரஜினி உடைய அப்பா கே நட்ராஜ் ரஜினியின் நீண்ட நாள் நண்பர்.  நண்பரின் மீது கொண்ட அபிப்பிராயத்தின் காரணமாகவே, அவர் தன்னுடைய மகளுக்கு ரஜினி என்று பெயர் வைத்தார். 

ஒரு நாள் ஐஸ்வர்யா ரஜினி சாரிடம் விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். 

இதைக்கேட்ட ரஜினி சார் ஆர்யன் அம்மாவிற்கு போன் அடித்து அவரிடம், விஷ்ணு விஷால் இந்தப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஐஸ்வர்யா சொல்லுகிறார். உனக்கும் அப்பாவுக்கும் ஓகேவா என்று கேட்டு இருக்கிறார். 

அதற்கு ரஜினி உண்மையில் அவரும் நானும் நன்றாகவே பேசிக் கொள்கிறோம்.  மகன் ஆர்யனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆகையால் தாராளமாக செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார். 

உண்மையில் அவர் ரஜினியிடம் அனுமதி வாங்குவதற்காக அப்படி கேட்கவில்லை. அவர் யாருடைய மனதும் புண்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக அப்படி கேட்டு இருக்கிறார் உண்மையில் நான் அதை அவரிடம் என்று கற்றுக் கொள்கிறேன். அப்படி ஒரு மனது இருப்பதால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

நான் தற்போது இவ்வளவு வெளிப்படையாக பேசுவதற்கு காரணமே என்னுடைய இரண்டாவது மனைவியாக ஜுவாலா தான். 

எனக்கு அவர் அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். என்மேல் அவருக்கு அவ்வளவு புரிதல் இருக்கிறது. அவர் என்னுடைய முன்னாள் மனைவிக்கு பிறந்த ஆரியனையும் அவ்வளவு விரும்புகிறார். நடந்தது நடந்து விட்டது. அதை கடந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம் என்பார்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.