தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vishnu Vishal Bold Speech At Rajinikanth Lal Salaam Trailer Lunch

Vishnu Vishal: முதல் மனைவிக்கு பறந்த போன் கால்.. சம்பவம் செய்த ரஜினி! - போட்டுடைத்த விஷ்ணு!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 06, 2024 03:48 PM IST

நான் இந்தப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ரஜினி சாரிடம் சொன்ன பொழுது, ரஜினி சார் என்னுடைய முன்னாள் மனைவியான ரஜினிக்கு போன் செய்து பேசி இருக்கிறார்.

விஷ்ணு விஷால்!
விஷ்ணு விஷால்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் கலந்து கொண்டு பேசிய விஷ்ணு விஷால், “ரஜினி சார் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதற்கு ஒரு உதாரணமாக நான் இங்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இதனை நிறைய பேர் வெளியில் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள்.ஆனால் நான் சொல்கிறேன். 

 

நான் இந்தப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ரஜினி சாரிடம் சொன்ன பொழுது, ரஜினி சார் என்னுடைய முன்னாள் மனைவியான ரஜினிக்கு போன் செய்து பேசி இருக்கிறார். 

அப்போது விஷ்ணு லால் சலாம் படத்தில் கமிட் ஆகி இருப்பதாகவும், ஐஸ்வர்யா தானும் அந்தப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்பதாகவும் சொல்லி,  தான் விஷ்ணுவுடன் இணைந்து நடித்தால் உனக்கு ஒன்றும் பிரச்சினையில்லையே என்று பேசி இருக்கிறார். இதை என்னுடைய மகனின் அம்மா என்னிடம் சொன்னார் . 

காரணம் என்னவென்றால் என்னுடைய முன்னாள் மனைவி ரஜினி சாரின் நண்பருடைய மகள். அவர் எந்தளவு தன்னுடைய நண்பரின் மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், அவர் போன் செய்து அனுமதி கேட்டு இருப்பார். அந்த மனதுதான் அவரை இன்றும் சூப்பர் ஸ்டார் ஆக வைத்திருக்கிறது.” என்று பேசினார். 

நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா, "ஆடியோ வெளியீட்டு விழாவில், (ரஜினியை சங்கி என்று அழைப்பதை கண்டித்திருந்தார்). நான் என்ன பேசப்போகிறேன் என்பது அவருக்குத் தெரியாது.

நான் அப்படி பேசிய போது அப்பா ஷாக்காகி விட்டார். இதற்கிடையே அப்பாவை ஏர்போர்ட்டில் நிறுத்திய பத்திரிகையாளர் ஒருவர், என்ன பிளான் செய்துதானே நீங்கள் அப்படி பேசினீர்கள்? என்று கேட்டார்.

என் மூலமாக திட்டமிட்டு பேசியோ அல்லது படத்தில் அரசியல் பேசியோ சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டிய அவசியம் கிடையாது. சொந்த கருத்தை பேசும் உரிமையை அவர் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்.

படம் மக்களை, மக்களைச்சாந்த ஒரு சிறு அரசியலை பேசுகிறது. குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசியலுடன் தொடர்பு இருக்கிறது. ஒரு விளையாட்டு வினையாக முடிந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்கா சென்று இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை அவரை அழைத்து எப்படி படம் ரிலீஸ் நெருங்கும் நேரத்தில், நீங்கள் விட்டு செல்லலாம் திட்டிக்கொண்டிருந்தேன்.

உடனே அவர் எங்கே விட்டுப் போனேன் என்று சொல்லி முழு நேரமும் ஜூமில் இருந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்தளவு பாசமான மனிதர். அந்தளவு அக்கறையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.

படத்தின் பின்னணி இசையை படம் ரிலீஸ் ஆன உடன் வெளியிடுவோம். அது நிச்சயம் 90களில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையை போன்று இருக்கும். அவருக்கு நான் அப்படி சொன்னால் பிடிக்காது. காரணம், அப்படியானால் இப்போது என்னுடைய இசை அப்படி இல்லையா என்று கேட்பார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தப்படம் கம்பேக் படமாக இருக்கும்.” என்று பேசினார்

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.