தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vishnu Vijay Latest Interview About Bigg Boss Pradeep Red Card Issue And Poornima Ravi Love

Vishnu Vijay: ரெட் கார்டு உருட்டுகள்.. ‘பிரதீப்ப வெளியே அனுப்புனது தப்பு’ பூர்ணிமா காதல் நிலவரம் என்ன? - விஷ்ணு பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 23, 2024 05:15 AM IST

இந்த விஷயத்தை பொறுத்தவரை, அங்கிருந்த பெண்கள் பிரதீப் மீதான குற்றச்சாட்டை 70 கேமராக்கள் முன்னால் சொன்னார்கள் அது மட்டுமல்ல, வார இறுதியில் வந்த கமல் சாரிடமும் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

பிக்பாஸ் தமிழ்!
பிக்பாஸ் தமிழ்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த விஷயத்தை பொறுத்தவரை, அங்கிருந்த பெண்கள் பிரதீப் மீதான குற்றச்சாட்டை 70 கேமராக்கள் முன்னால் சொன்னார்கள் அது மட்டுமல்ல, வார இறுதியில் வந்த கமல் சாரிடமும் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். 

அப்படி இருக்கும் பொழுது அது நிச்சயமாக பொய்யாக இருக்க முடியாது என்று நம்பினேன்.அதை பார்க்கும் பொழுது இப்படி எல்லாம் நடந்து இருக்கிறதா என்று மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

திடீரென்று என்னையும் கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்தார்கள். அங்கு கமல் சார் பெரிதாக எல்லாம் பேச வேண்டாம். உங்களது முடிவை மட்டும் ரத்தின சுருக்கமாக சொல்லுங்கள் என்று சொன்னார். 

அப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் சிக்கும் போது, நீங்கள் என்ன செய்வீர்கள். பூர்ணிமாவும் அந்த விஷயம் தொடர்பாக என்னிடம் ஒரு விஷயத்தை சொல்லி இருந்தார். அதனால்தான் என்னால் அந்த சூழ்நிலையில் அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் பின்னர் தான் அது பிரதீப்பை டார்கெட் செய்து வெளியே அனுப்ப உருவாக்கப்பட்ட உத்தி என்பது தெரியவந்தது. எனக்கும் அது நடந்தது. 

என்னையும் நான் அவரை பயன்படுத்திக் கொண்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். என்னை பொறுத்தவரை பிரதீப்பை வெளியே அனுப்பி இருக்க வேண்டிய தேவையில்லை. அது தவறு என்று நான் நினைக்கிறேன். நான் வெளியே வந்து பிரதீப்பிடம் பேசினேன். அவரும் சில விஷயங்கள் தொடர்பாக எனக்கு விளக்கங்கள் கொடுத்தார்.

பூர்ணிமாவை பொறுத்தவரை எனக்கும் அவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. ஒரு கட்டத்தில் நானே அவரிடம் நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா என்று கேட்டு விட்டேன். அதற்கு அவர் என்னிடம்.. எதுவுமே சொல்லவில்லை. உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மற்றவர்களை விட அவரை நான் மிக மிக நம்பினேன். யாரும் இங்கே மிகவும் பரிபூரணமான நல்ல மனிதர்கள் என்று நான் சொல்லவில்லை. 

நானும் அப்படித்தான். அப்படி இருக்கும் பொழுது நான் செய்த விஷயங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவரிடம் சில விஷயங்களை சொல்வேன், கேட்பேன். ஆனால் அவர் பேசிய சில விஷயங்கள் என்னை டார்கெட் செய்வது போல இருந்தது. சில விஷயங்களில் அவர் மாறுபட்டு நின்றபோது அவர் பிக்பாஸ் கேமிற்காகவே இப்படி ஆடுகிறார் என்பது தெளிவாக தெரிந்தது. ஆகையால் அவர் எனக்கு பிக் பாஸ் வீட்டில் நேர்மையாக இல்லை என்பதை நான் நம்புகிறேன்” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.