Madhagajaraja Box Office: பொங்கல் ரேஸ் படங்களை வாஷ் அவுட் செய்து ஆல் ரவுண்டராக நிற்கும் மதகஜராஜா.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Madhagajaraja Box Office: பொங்கல் ரேஸ் படங்களை வாஷ் அவுட் செய்து ஆல் ரவுண்டராக நிற்கும் மதகஜராஜா.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Madhagajaraja Box Office: பொங்கல் ரேஸ் படங்களை வாஷ் அவுட் செய்து ஆல் ரவுண்டராக நிற்கும் மதகஜராஜா.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Malavica Natarajan HT Tamil
Jan 19, 2025 09:13 AM IST

Madhagajaraja Box Office: 12 வருடங்களுக்குப் பின் வெளியாகி ரசிகர்களிடம் ஆமோக ஆதரவைப் பெற்றுவரும் மதகஜராஜா படத்தின் பாக்ஸ் ஆபில் நிலவரம் குறித்து காண்போம்.

Madhagajaraja Box Office: பொங்கல் ரேஸ் படங்களை வாஷ் அவுட் செய்து ஆல் ரவுண்டராக நிற்கும் மதகஜராஜா.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
Madhagajaraja Box Office: பொங்கல் ரேஸ் படங்களை வாஷ் அவுட் செய்து ஆல் ரவுண்டராக நிற்கும் மதகஜராஜா.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

படத்தின் கலெக்‌ஷன்

மதகஜராஜா திரைப்படம் வெளியாகி 7ம் நாளான நேற்று படம் 4.14 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக இதுவரை 33. 75 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக சாக்னில்க் டாட் காம் இணையதளம் தெரிவித்துள்ளது.

படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்ட நிலையில், அதன் மூலமாக காலை, மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்தது.

அதுவும் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதகஜராஜா படத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதனால், படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது.

போட்டி படங்களை காலி செய்த சுந்தர்.சி

தமிழ்நாட்டில் இந்தப்படத்திற்கு போட்டியாக வேறு எந்தப்படங்களும் சோபிக்க வில்லை; தெலுங்கில் கேம் சேஞ்சர் மற்றும் டாகு மகாராஜ் போன்ற திரைப்படங்கள் போட்டிப்படங்களாக இருந்த போதும் மதகஜராஜா படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஷாலுக்கு என்ன ஆச்சு

முன்னதாக, மதகஜராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், கைநடுக்கத்துடன் காணப்பட்டார். இதையடுத்து அவரது உடல் கடுமையாக நலிவுற்றதாகவும், அவன் இவன் படத்தில் அவர் மாறுகண் வைத்து நடித்ததும், அதன் காரணமாக முளைத்த கெட்ட பழக்க வழக்கங்களுமே இதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

விளக்கம் கொடுத்த விஷால்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், ‘இது 12 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற படம் மாதிரியே தெரியல. புதுப்படம் மாதிரி இருக்கு. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோரும் நல்லபடியா குடும்பத்துடன் சந்தேஷமா கொண்டாடுங்க.

எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல

தமிழ்நாடு மட்டுமல்ல, கனடாவில் இருந்து கூட எனக்கு போன் கால் வந்தது. நான் அப்போலோவில் அட்மிட் ஆகியிருக்கேன்னு என் உடலநிலை குறித்து தப்பான தகவல்கள் வெளிவந்தது. அப்படிலாம் ஒன்னும் இல்லை. எனக்கு கடுமையான காய்ச்சல் தான். அன்னைக்கு என்னால முடியல. ஆனாலும் இத்தனை வருஷம் கழித்து படம் வருது. சுந்தர் சி சார் முகம் பார்க்கணும், அந்த ஃபங்கஷனை மிஸ் செய்ய கூடாதுன்னு எப்படியாவது முடிஞ்ச அளவு அட்டெண்ட் செஞ்சேன்.

பல வருஷ கனவு

நானும், சுந்தர் சி சாரும் இந்த படத்துக்கான கதவு எப்போ திறக்கும்னு பல வருஷமாக பேசியிருக்கோம். கனவு நனவாகியிருப்பது உண்ர்ச்சிகரமான தருணம். எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. இந்த வெற்றி, சுந்தர் சி சாரையே சேரும். அவர் சிறந்த கமர்ஷியல் பட இயக்குநர். எங்களது காம்பினேஷனில் இந்த படம் பொங்கலுக்கான சரியான படமாக இருக்கும்.

இது காசு செலவு செஞ்சதுக்கு சந்தோஷமா குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். நீங்கள் கொடுத்த அன்பு, ஆதரவை மனசில் ஏற்றிக்கொண்டேன். பொறுப்பும் வந்திருக்கு. என்னாலே முடிந்தால் ஒவ்வொருத்தரையு் கட்டிப்புடித்து நன்றி சொல்வேன்" என்றார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.