Vishal Health: என் உடலில் எந்த பிரச்னையும் இல்லை.. முகத்தை பார்த்தாலே தெரியுது.. திரும்ப வந்த விஷால் தெளிவான பேச்சு
Vishal On His Health: என் உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என்று தனது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசிய நடிகர் விஷால், மதகஜராஜா படம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்பதை அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது எனவும் கூறினார்.

சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டின் பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கும் படம் மதகஜராஜா. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ப்ரிவியூ ஷோ நேற்று (ஜனவரி 11) மாலை நடைபெற்றது.
படத்தை பார்த்த பலரும் சிறப்பாக இருப்பதாகவும், நல்லதொரு பேமிலி எண்டர்டெயினராக இருப்பதாகவும் தெரிவித்தனர். ப்ரிவியூ ஷோவை பார்ப்பதற்கு நடிகர் விஷாலும் வந்திருந்தார். இயக்குநர் சுந்தர் சி, நடிகை வரலட்சுமி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
இதையடுத்து ஷோ முடிந்த பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், தனது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசினார். அத்துடன் தான் நலம் பெற வேண்டிய பிராத்தித்த, வாழ்த்து அனுப்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நடிகை விஷால் பேசியதாவது, "எல்லோருக்கும் வணக்கம். ஜனவரி 11ஆம் தேதி மதகஜராஜா ப்ரீமியர் நடந்திருக்கு. ஜனவரி 12ஆம் தேதி படம் வெளியாகுது. 12 வருஷம் கழிச்சு 12ஆம் தேதியே படம் வெளியாகுது.
இது 12 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற படம் மாதிரியே தெரியல. புதுப்படம் மாதிரி இருக்கு. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோரும் நல்லபடியா குடும்பத்துடன் சந்தேஷமா கொண்டாடுங்க. முக்கிய இந்த படத்த பத்தி சொல்றதை விட இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புறேன்.
எனது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்ல
தமிழ்நாடு மட்டுமல்ல கனடாவில் இருந்து கூட எனக்கு போன் கால் வந்தது. நான் அப்போலோவில் அட்மிட் ஆகியிருக்கேன்னு என் உடல்நிலை குறித்து தப்பான தகவல்கள் வெளிவந்தது. அப்படிலாம் ஒன்னும் இல்லை.
எனக்கு கடுமையான காய்ச்சல் தான். அன்னைக்கு என்னால முடியல. ஆனாலும் இத்தனை வருஷம் கழித்து படம் வருது. சுந்தர் சி சார் முகம் பார்க்கனும், அந்த பங்கஷனை மிஸ் செய்ய கூடாதுன்னு எப்படியாவது முடிஞ்ச அளவு அட்டெண்ட் செஞ்சேன்.
எனது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. நண்பர்கள், பேன்ஸ் என எல்லோரும் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அனைவருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன். நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுமக்கள், மீடியாவை பொறுத்தவரைக்கும் என்னால் யூகிக்க முடியல. இன்னும் ஏராளமான மெசேஜ்க்கு ரிப்ளை கொடுக்கனும். எல்லா ஸ்டேட்டில் இருந்து போன் செய்து உடல் நிலை குறித்து கேட்டார்கள்.
Get well soon, Come back என கேட்டபோது உணர்ச்சிகரமாக இருந்தது. இப்போது சொந்த காலில் நிற்கிறேன். அனைத்து ஊடக நண்பர்களுக்கு நன்றிகள். நான் வார்த்தையால் சொல்ல முடியாது. படங்கள் மூலமாதான் சொல்ல முடியும்.
முகத்தை பார்த்தாலே தெரிகிறது
நானும், சுந்தர் சி சாரும் இந்த படத்துக்கான கதவு எப்போ திறக்கும்னு பல வருஷமாக பேசியிருக்கோம். கனவு நனவாகியிருப்பது உணர்ச்சிகரமான தருணம்.
எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. இந்த வெற்றி சுந்தர் சி சாரையே சேரும். அவர் சிறந்த கமர்ஷியல் படம் இயக்குநர். எங்களது காம்பினேஷில் இந்த படம் பொங்கலுக்கான சரியான படமாக இருக்கும். காசு செலவு செஞ்சதுக்கு சந்தோஷமா குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும்.
முதல் காட்சி முடிஞ்சதும் படம் நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்வாங்க. சண்டகோழிக்கு பின்னர் மதகஜராஜா என்னோட பேவரிட் படம். ஒரு பெஸ்டிவலில் பெஸ்டிவல் படத்தை கொடுத்தது கடவுளா அமைச்சு கொடுத்தது.
எட்டு நாள் லீவு இருக்கிறது. குடும்பத்துடன் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு தரமான படமாக இருக்கும் என நம்புகிறேன். நீங்கள் கொடுத்த அன்பு, ஆதரவை மனசில் ஏற்றிக்கொண்டேன். பொறுப்பும் வந்திருக்கு. என்னால் முடிந்தால் ஒவ்வொருத்தரையும் கட்டிப்புடித்து நன்றி சொல்வேன்" என்றார்
இப்பவும் பிரஷ்ஷா இருக்கு
மதகஜராஜா படம் குறித்து நடிகை வரலட்சுமி கூறியதாவது, "படம் ரொம்ப பிரஷ்ஷா இருக்கு. மனோபாலா, மணிவண்ணன் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படம் இருக்கிறது. நான் நடித்த இரண்டாவது படம் இது. எனவே பார்க்கும்போது பயமா இருந்தது. படம் ரொம்பவும் சிறப்பாக இருக்கும். பொங்கலுக்கு சிறந்த பேமிலி எண்டர்டெயினராக உள்ளது" என்று கூறினார்.
மதகஜராஜா படம்
பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். வில்லனாக சோனு சூட் நடித்துள்ளார். சந்தானம், மணிவண்ணன், மனோபாலா, நிதின் சத்யா, கிரிக்கெட்டர் சடகோபன் ரமேஷ், ஜான் கொக்கேன், மயில்சாமி, சிட்டி பாபு, சீனு மோகன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். ஆர்யா, சதா ஆகியோர் கேமியா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

தொடர்புடையை செய்திகள்