Madhagajaraja Box Office: 50 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைய உள்ள மதகஜராஜா.. தெலுங்கிலும் ஜெயிக்குமா?
Madhagajaraja Box Office: சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவான மதகஜராஜா படம் ரசிகர்களின் ஆதரவால் 50 கோடி ரூபாய் வசூலை பெற உள்ளது.

Madhagajaraja Box Office: சுந்தர் சி- விஷால் கூட்டணியில் உருவாகி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டின் பொங்கல் ரிலீஸாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. காமெடி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அந்தப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் விபரங்களை பார்க்கலாம்.
படத்தின் கலெக்ஷன்
மதகஜராஜா திரைப்படம் வெளியாகி 12ம் நாளான நேற்று படம் 0.93 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக இதுவரை 45.65 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கணக்கிட்டு சொல்லும் சாக்னில்க் டாட் காம் இணையதளம் தெரிவித்துள்ளது.
படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்ட நிலையில், அதன் மூலமாக காலை, மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்தது.