Madhagajaraja: தெலுங்கில் கல்லா கட்டப் போகும் மதகஜராஜா.. பக்கா ப்ளானில் விஷால்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Madhagajaraja: தெலுங்கில் கல்லா கட்டப் போகும் மதகஜராஜா.. பக்கா ப்ளானில் விஷால்..

Madhagajaraja: தெலுங்கில் கல்லா கட்டப் போகும் மதகஜராஜா.. பக்கா ப்ளானில் விஷால்..

Malavica Natarajan HT Tamil
Jan 23, 2025 11:32 AM IST

Madhagajaraja: தமிழில் மெஹாஹிட் அடித்துக் கொண்டிருக்கும் மதகஜராஜா திரைப்படம் தற்போது தெலுங்கில் ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Madhagajaraja: தெலுங்கில் கல்லா கட்டப் போகும் மதகஜராஜா.. பக்கா ப்ளானில் விஷால்..
Madhagajaraja: தெலுங்கில் கல்லா கட்டப் போகும் மதகஜராஜா.. பக்கா ப்ளானில் விஷால்..

12 வருட இடைவெளிக்குப் பிறகு

2013-ம் ஆண்டே படப்பிடிப்பை முடித்த மதகஜராஜா, கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதுமட்டுமின்றி, இந்த பொங்கலுக்கு தமிழில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

மதகஜராஜா டீம்

விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிதின் சத்யா, சந்தானம், சோனு சூட், மணிவண்ணன், மனோபாலா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்தார்.

தெலுங்கு ரிலீஸ் தேதி

இந்நிலையில், சில நாட்களாக மதகஜராஜா படம் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படம் ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சத்ய கிருஷ்ணன் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கு ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆக்ஷன் காமெடி படம்

மூன்று நெருங்கிய நண்பர்களை சிக்கலில் இருந்து மீட்க ஒரு இளைஞன் செய்யும் காரியத்தை ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. எம்.ஜி.ஆர் என்கிற ராஜா (விஷால்) ஒரு திருமணத்தில் தனது பால்ய நண்பர்கள் மூவரை சந்திக்கிறார்.

விஸ்வநாத் (சோனு சூட்) என்ற ரவுடியால் தனது நண்பர்கள் சிக்கலில் இருப்பதை ராஜா அறிந்து கொள்கிறார். அவர்களை அந்த ரவுடியிடம் இருந்து காப்பாற்ற ராஜா என்ன செய்தார்? என்பதே படத்தின் கதை. மேலும் ராஜாவின் வாழ்க்கையில் வந்த மாதவி (அஞ்சலி) மற்றும் மாயா (வரலட்சுமி சரத்குமார்) ஆகியோரைப் பற்றியும் படம் பேசுகிறது.

100 கோடிக்கும் அதிகமான வசூல்

மதகஜராஜா படத்தை வெளியிட விஷால் விநியோகஸ்தர் ஆகிவிட்டார். இந்த படம் திரையரங்குகளில் ரூ .1௦௦ கோடிக்கு மேல் வசூலிக்க வாய்ப்புள்ளது என்று வர்த்தக வட்டாரங்கள் ஊகிக்கின்றன. அதேசமயம், மதகஜராஜா ஓடிடி உரிமையை பெறுவதிலும் பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா ஆர்வம்

12 ஆண்டு வெளியாகாமல் முடங்கி கிடந்த மதகஜராஜா படத்திற்கு மக்கள் அளித்த ஆதரவு தமிழ் சினிமாவிற்கு ஒரு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. இதனால், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வெளியாகாமல் தடைபட்டு நிற்கும் படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.