MadhaGajaRaja: போதை.. நரம்புத்தளர்ச்சி.. அந்தாள் டாக்டரான்னுகூட எனக்குத் தெரியல.. டாக்டர் காந்தராஜை வைச்சு செய்த விஷால்
MadhaGajaRaja: போதை.. நரம்புத்தளர்ச்சி.. அந்தாள் டாக்டரான்னுகூட எனக்குத் தெரியல.. டாக்டர் காந்தராஜை வைச்சு செய்த விஷால் உடைய பேச்சு வைரல் ஆகி வருகிறது. மத கஜ ராஜா படவிழாவில் தான் இந்தப் பேச்சு வந்திருக்கிறது.

MadhaGajaRaja: போதை.. நரம்புத்தளர்ச்சி.. அந்தாள் டாக்டரான்னுகூட எனக்குத் தெரியல என காய்ச்சலின்போது தான் மேடையில் பேசியதை விமர்சித்த டாக்டர் காந்தராஜை கடுமையாக விஷால் தாக்கிப்பேசியுள்ளார்.
விஷால், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் நடித்து சுந்தர் சி இயக்கிய திரைப்படம், மத கஜ ராஜா. இப்படம் 12 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வெளியாகி சினிமாவில் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
இதுதொடர்பாக மத கஜ ராஜா வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷால், ‘’பொதுவாக நிலநடுக்கம் வந்தால் நியூஸ் வரும். மறுநாள் எல்லோரும் மறந்திடுவாங்க. ஆனால், விஷாலுடைய நடுக்கம் வந்து உலகம் முழுக்க ஃபேமஸ் ஆனது. உங்களால் விஷால் ஹெல்த்துக்கு என்ன, விஷால் நல்லாயிருக்கணும், விஷால் திரும்பவும் வரணும் என்று உலகம் முழுக்க நிறைய பேர் கண்ணீர் விட்டிருக்காங்க.
அந்த நிகழ்ச்சி நடந்ததுக்குப்பின், நான் ஒன்று உணர்ந்தேன். எத்தனை பேர் என்னை நேசிச்சாங்க. பிடிக்காதவங்களுக்கும் என்னை பிடிக்க ஆரம்பிச்சு. கோயிலில் பூ கட்டுற அம்மா என் உடல் நிலை குறித்து கேட்டாங்க. ரோட்டில் பெருக்கிற அம்மா வந்து தம்பி என்னப்பா ஆச்சு உனக்கு அப்படின்னு கேட்டு, கண்கலங்கிட்டதாக சொன்னாங்க.
உலகம் முழுவதும் விஷால் நல்ல வரணும்னு நினைச்சாங்க: விஷால்
நான் வீட்டில் போய் என்னைப் பிடிக்குமான்னு கேட்டால் கூட, என்னைப் பலருக்கு பிடிச்சிருக்காது. இது 40 வருஷம் ஆனாலும் நடக்காது. உலகம் முழுவதும் விஷால் நல்லா வரணும்னு எதிர்பார்த்தாங்க பாருங்க.
ஆர்யாவை பத்தி சொல்லும்போது கண்கலங்கிடும். எல்லோருக்கும் நண்பர்கள் இருப்பாங்க. இப்படி ஒரு நண்பன் கிடைக்கிறது பாக்கியம். நான் ஏதோ ஒரு வகையில் புண்ணியம் செய்திருக்கேன்.
அன்னைக்கு மருத்துவர்கள் அந்த ஃபங்ஷனுக்குப் போக வேண்டாம் என்று சொன்னார்கள். உங்களுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கு. நடுக்கம் வரலாம்ன்னு சொன்னாங்க. நான் கண்ணாடி முன்பு போனேன். அப்போது சுந்தர் சி தான் தெரிஞ்சார். நாங்கள் 12 வருஷமாக அப்பப்போ பேசிக்குவோம். இந்த வருஷம் வந்தால் நல்லாயிருக்கும்ன்னு பேசுவார். ஊக்கம் கொடுத்திட்டே இருந்தார். விஜய் ஆண்டனிக்குத் தெரியும் ஒரு படத்தோட ஹீரோவா, படத்துக்கு எவ்வளவு உழைப்பு கொடுக்கணும் என்று. சண்டைக்கோழிக்கு அப்புறம் எனக்கு மத கஜ ராஜா தான் பிடிச்ச படம். சுந்தர் சி சொல்வார், எப்போது மத கஜ ராஜா வந்தாலும் பிளாக் பஸ்டர்னு சொல்வார். இந்திய திரைப்பட வரலாற்றிலேயே 12 வருஷங்கள் கழித்து ஒரு படம் வந்து பிளாக் பஸ்டர் ஆனது மத கஜ ராஜா திரைப்படம் தான். இதை நான் பதிவு பண்ணிக்கிறேன்.
ஏனென்றால், நான்கைந்து ஆண்டுகள் முன்பு எடுத்து தாமதமாக வெளிவரும் படங்கள் கூட, ஓடாது. ஜனங்க வரமாட்டாங்க. இது நம்பமுடியாதது. 12 வருஷங்கள் கழித்து கோலகலமாக மக்கள் தியேட்டரில் கொண்டாடுறாங்க. அப்படி கடவுள் சொல்லியிருக்கிறார்னு நினைக்கிறேன். நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
டாக்டர் காந்தராஜை நேரடியாக தாக்கிபேசிய விஷால்:
சில பேருக்கு நான் ஒன்று சொல்றேன். ஸ்கூலில் படிக்கும்போது டீச்சர் திட்டினால் கூட, புரியலைன்னா டவுட் கேட்போம். அதே மாதிரி, நடிகர்கள் நடிகைகளை பத்தி எழுதும்போது பேசும்போது ஏதாவது டவுட் இருந்தால் என்னிடமோ, என் மேனேஜரிடமோ கேட்டு என்ன வேண்டும் என்றாலும் எழுதிக்கலாம்.
கற்பனை எல்லாம் இயக்குநர்கள்கிட்ட கொடுத்திடுங்க. விஷால் வந்து போதைக்கு அடிமையாகிட்டாப்புல, நரம்புத்தளர்ச்சி, அப்புறம் டாக்டர்கூட ஒரு பேட்டி கொடுத்தார். அந்தாள் டாக்டரா இல்லையான்னுகூட எனக்குத் தெரியாது. கற்பனை உலகத்தில் இருக்கார். அதில் பாஸிட்டிவான விஷயம் என்னவென்றால், என்னை எத்தனைபேர் விரும்புறாங்கன்னு. சுந்தர் சி சார்கூட படம் பண்ணும்போது எனக்கு உடல்நிலையும் மனநிலையும் நல்லாயிருக்கும். அந்த 60 நாள், 80 நாள், என்னுடைய எல்லாத்தையும் அவர்கிட்ட ஒப்படைச்சுடுவேன். ஒரு இயக்குநர் 30 வருஷம் நீடிக்கிறது சாதாரண விஷயம் இல்லை. அவருக்கு பெரிய கைதட்டுகள். இந்தப் படத்துக்குப் பின் கெளதம் மேனன் கூட படம் பண்றோம். அடுத்து துப்பறிவாளன்2, அஜய் ஞானமுத்துவின் படம் இருக்கு. அடுத்து சுந்தர் சி கூட்டணியில் ஒரு படம் பண்ணனும்’’ என்றார், நடிகர் விஷால்.

டாபிக்ஸ்