தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vishal Paid His Last Respect To Late Actor Captain Vijayakanth

Vishal: நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் பரிசீலனை - விஷால்

Aarthi Balaji HT Tamil
Jan 09, 2024 12:21 PM IST

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும் என நடிகர் விஷால் கூறினார்.

விஷால்
விஷால்

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கேப்டன் மறைவிற்கு வராத சில நடிகர்கள், நடிகைகள் அவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதன் படி, இன்று காலை வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் காலை 11.00 மணியளவில் கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின் அங்கு வந்த பொது மக்கள் 500 பேருக்கு தன் சொந்த செலவில் உணவளித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”விஜயகாந்த் மறைந்த போது என்னால் வரமுடியாதது துரதிர்ஷ்டவசமானது. விஜயகாந்த் மறைவுக்கு

வாழும் போதே கடவுளாக வாழ்ந்தவர் விஜயகாந்த். அவர் ஒரு நல்ல மனிதர். தைரியமான அரசியல்வாதி. ஒருவர் மறைந்த பிறகு சாமி என்று அழைப்பார்கள். ஆனால் கேப்டன் உயிருடன் இருக்கும் போதே மக்கள் அவரை சாமி என அழைத்தார்கள். கேப்டன் நம்முடன் இன்று இல்லை என்றாலும் நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார். என்னை மன்னிச்சிடு சாமினு தான் நான் சொல்லனும். அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத சூழலால் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

சமூக சேவை மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும். நடிகர் சங்கத்துக்காக அவரின் உழைப்பு சாதரணமானது அல்ல. நடிகர் சங்கம் சார்பில் வரும் 19 ஆம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும் ” என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.