Vishal Health: அவன் இவன் படத்தால் வந்த வினை? எல்லாமே வதந்தி.. இன்னும் ஓரிரு நாள்தான்..விஷால் மேலாளர் விளக்கம்
Vishal Health Update: எல்லாம் இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தால் வந்த வினை எனவும், மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விஷால் உடல்நிலை குறித்து தகவல்கள் பரவி வரும் நிலையில் அவரது மேலாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சி - விஷால் கூட்டணியில் 2013இல் உருவான ஆக்ஷன் த்ரில்லர் படம் மதகஜராஜா. ஆம்பள படத்துக்கு முன்னர் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான முதல் படமும் இதுதான். பல்வேறு பிரச்னைகள் காரணமாக பெட்டிக்குள் முடங்கி கிடந்த இந்த படம் பொங்கல் ரிலீஸாக 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையடுத்து படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் விஷால், சுந்தர் சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்பட படக்குழுவினர்கள் பங்கேற்றனர்.
விஷாலின் உடநிலையில் தடுமாற்றம்
மதகஜராஜா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் கைநடுத்தக்கதுடன், குரல் தடுமாற்றத்துடன் பேசியது தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அவருக்கு அதிகப்படியான வைரல் காய்ச்சல் ஏற்ப்பட்டதால்தான் இவ்வாறு ஆனதற்கு காரணம் என டாக்டர் சான்றிதழுடன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர். இதைத்தொடர்ந்து விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்தன.
விஷால் மேலாளர் விளக்கம்
இதைத்தொடர்ந்து விஷாலின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உலா வரும் தகவல் வெறும் வதந்தியே. அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
வைரஸ் காய்ச்சல் காரணமாக அவருக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்ட, சற்று சோர்வாக காணப்படுகிறார். இன்னும் ஓரிரு நாள்களில் முழுமையாக குணமடைந்து தனது அன்றாட பணிகளை அவர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விஷால் உடல் குறித்து பரவும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கைநடுக்கத்துடன் பேசிய விஷால்
முன்னதாக, மதகஜராஜா நிகழ்ச்சியில் வேஷ்டி சட்டை அணிந்து வந்திருந்த நடிகர் விஷால், கொஞ்சம் உடல் எடை அதிகரித்து, இரு கண்ணங்களும் லேசாக விங்கிய நிலையில் பார்ப்பதற்கு சோர்வான முகத்துடன் தோற்றமளித்தார். அத்துடன் நிகழ்ச்சியில் கையில் மைக்கை பிடித்தபடி பேசியபோது விஷாலின் கைகள் நடுக்கத்திலே இருந்தது. அவரது பேச்சும் இயல்பான குரலில் இல்லாமல் லேசான குலைந்தவாறே இருந்தது.
இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் விஷாலுக்கு உடல் நிலை சரியில்லை எனவும், அவர் விரைவில் குணமாக வேண்டும் எனவும் ரசிகதர்கள் தங்களது அக்கறையை வெளிப்படுத்துமாறு கருத்துகளை பகிர்ந்தனர்.
இன்னும் சிலர் விஷாலுக்கு சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் ஹிட் கொடுக்காத நிலையில் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இப்படி ஆகி விட்டதாகவும் சிலர் அவர் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் கருத்துகளை பகிர்ந்தனர்.
இயக்குநர் பாலாவால் வந்த வினை
விஷாலின் இந்த நிலைமைக்கு பாலா தான் காரணம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து விஷால் நடித்திருப்பார். இந்த படத்தில் வால்டர் வணங்காமுடி என்ற கதாபாத்திரத்தில் ஒன்னரை கண்ணுடன் படம் முழுவதும் நடித்திருப்பார் விஷால். படத்தின் ரிலீஸ் சமயத்தில் விஷாலின் நடிப்புக்கு வெகுவாக பாராட்டுகளும் குவிந்தன.
இந்த சூழ்நிலையில் மதகஜராஜா பட நிகழ்வில் விஷால் உடல்நிலை குன்றிபோனதற்கு அவன் இவன் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் தாக்கம் தான் என கூறி பிரபல சினிமா பத்திரகையாளர்கள் கூறும் கருத்துகளும் பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஷால் ஒன்னரை கண்ணாக தோன்ற சில மருத்துவ செயல்பாடுகள் மேற்கொண்டதே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என பேசப்படுகிறது.
அதேபோல் அவன் இவன் ஷுட்டிங் சமயத்தில் இந்த கேரக்டரால் தான் பட்ட கஷ்டத்தை விஷால் பல முறை புலம்பியதாகவும், அதை நேரில் பார்த்ததாகவும் ஆர்யா பேசிய விடியோவும் வைரலாகியுள்ளது. அந்த சமயத்தில் வலியை போக்க குடிப்பழக்கத்தை ஆரம்பித்த விஷால், பின்னர் குடி பழக்கமே இல்லாத நிலைக்கு மாறியதாகவும் ஆர்யா நக்கலடித்தார்.
மதகஜராஜா படம்
விஷால் நடித்து 11 ஆண்டுகள் கழித்து தற்போது பொங்கல் ரிலீஸாக வர இருக்கும் மதகஜராஜா படத்தில் அஞ்சலி, வரலட்சுமி என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சந்தானம், சோனு சூட், முன்னாள் கிரிக்கெட்டர் சடகோப்பன் ரமேஷ், ஜான் கொக்கேன் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் நடித்திருந்த மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு, சீனு மோகன், மணிவண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். படத்தில் இடம்பெறும் டியர் லவ்வரு என்ற பாடலை விஷால் பாடியுள்ளார். இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக மதகஜராஜா இருந்து வருகிறது.
டாபிக்ஸ்