Box Office Today: கெத்து காட்டும் மதகஜ ராஜா.. பொங்கல் ரிலீஸில் டபுள் இலக்க வசூல் - மற்ற படங்களின் வசூல் நிலவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Today: கெத்து காட்டும் மதகஜ ராஜா.. பொங்கல் ரிலீஸில் டபுள் இலக்க வசூல் - மற்ற படங்களின் வசூல் நிலவரம்

Box Office Today: கெத்து காட்டும் மதகஜ ராஜா.. பொங்கல் ரிலீஸில் டபுள் இலக்க வசூல் - மற்ற படங்களின் வசூல் நிலவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 16, 2025 11:59 AM IST

Box Office Collection Today: பொங்கலுக்கு வெளியான ஆறு தமிழ் படங்களில் விஷாலின் மதகஜராஜா டாப்பில் இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பாலாவின் வணங்கான், ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை படத்துக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

கெத்து காட்டும் மதகஜ ராஜா.. பொங்கல் ரிலீஸில் டபுள் இலக்க வசூல் - மற்ற படங்களின் வசூல் நிலவரம்
கெத்து காட்டும் மதகஜ ராஜா.. பொங்கல் ரிலீஸில் டபுள் இலக்க வசூல் - மற்ற படங்களின் வசூல் நிலவரம்

இந்த படங்களுடன் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக இயக்கிய நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் படமும் ஏற்கனவே அறிவித்தப்பட பொங்கல் ரிலீஸாக வெளிவந்தது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் அனைத்து படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இருப்பினும் வசூலை பொறுத்தவரை விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் மதகஜராஜா மாஸ் காட்டி வருகிறது. ஆக்‌ஷன், காமெடி, கவர்ச்சி என அனைத்து கலந்த கலவையாக சிறந்த எண்டர்டெயினராக மதகஜராஜா இருப்பதாக படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள்.

மதகஜராஜா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவாகி கடந்த 12ஆம் தேதி வெளியான மதகஜராஜா திரைப்படம் முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூலித்தது. படத்துக்கு கிடைத்த வரவேற்பினால் அடுத்தடுத்த நாள்களில் வசூலானது அதிகரிக்க தொடங்கியது. படம் வெளியாகி நான்கு நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை மதகஜராஜா படம் ரூ. 18.85 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை வெளிப்படுத்தும் sacnilk.com இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த படம் இப்போது வரை ரூ. 22 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் வெளியான நேரடி படங்களில் பொங்கல் ரேஸில் மதகஜராஜா படம் தான் முதலில் இருந்து வருகிறது.

பொங்கல் ரிலீஸ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

இந்த ஆண்டு பொங்கலுக்கு முதலில் வெளியான படமாக பாலாவின் வணங்கான் இருந்து வருகிறது. கடந்த 10ஆம் தேதியே வெளியான இந்த படம் முதல் நாளில் ரூ. 0.9 கோடி வரை மட்டுமே வசூலித்தது. படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தாமதமாக ரிலீஸ் ஆனது.

இதையடுத்து படம் பார்த்தவர்களில் வெளிப்படுத்தி வரும் நேர்மறையான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாள்களில் வசூலில் பிக் அப் ஆனது. படம் வெளியாகி 6 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை ரூ. 5.55 கோடி வசூலித்திருப்பதாக sacnilk.com தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக பொங்கல் நாளான ஜனவரி 14ஆம் தேதி வெளியான ரெமாண்டிக் படமான காதலிக்க நேரமில்லை படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில் முதல் நாளில் ரூ. 2.25 கோடி வசூலித்துள்ளது. ரவி மோகன் - நித்யா மேனன் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படம் இதுவரை ரூ. 3.7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அத்ரவா முரளி சகோதரர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்திருக்கும் நேசிப்பாயா படம் ரூ. 0.4 கோடி, மெட்ராஸ்காரன் படம் ரூ. 0.24 கோடி, தருணம் படம் ரூ. 0.04 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலவையான விமர்சனங்களை பெற்ற கேம் சேஞ்சர்

ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா உள்பட பலர் நடித்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் ஜனவரி 10ஆம் தேதியே வெளியான நிலையில், இதுவரை இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 126.5 கோடி வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ. 154.5 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.