செல்லத்துக்கு வெட்கத்த பாருடா.. விஷால் - தன்ஷிகா திருமணம்! - உறுதி செய்த இசை மேடை! - வெட்கத்தில் தம்பதிகள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  செல்லத்துக்கு வெட்கத்த பாருடா.. விஷால் - தன்ஷிகா திருமணம்! - உறுதி செய்த இசை மேடை! - வெட்கத்தில் தம்பதிகள்!

செல்லத்துக்கு வெட்கத்த பாருடா.. விஷால் - தன்ஷிகா திருமணம்! - உறுதி செய்த இசை மேடை! - வெட்கத்தில் தம்பதிகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 19, 2025 09:05 PM IST

நடிகர் சங்கத்தை நீ திறந்து விட்டால் அதில் எனக்கு என்ன பிரச்சினை.. விஷால் செல்லத்துக்கு வெட்கத்தை பாருங்கள். எனக்கு விஷாலை மிகவும் பிடிக்கும். - ஆர்.பி. உதயகுமார்!

செல்லத்துக்கு வெட்கத்த பாருடா.. விஷால் - தன்ஷிகா திருமணம்! - உறுதி செய்த இசை மேடை! - வெட்கத்தில் தம்பதிகள்!
செல்லத்துக்கு வெட்கத்த பாருடா.. விஷால் - தன்ஷிகா திருமணம்! - உறுதி செய்த இசை மேடை! - வெட்கத்தில் தம்பதிகள்!

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.பி உதயகுமார், ‘நல்ல வேலையாக என்னை நீண்ட நேரம் உட்கார விடாமல் அழைத்து விட்டீர்கள். உண்மையில் ட்ரெய்லரை பார்த்து நான் பயந்து விட்டேன். என்ன அடி அடிக்கிறார் தன்ஷிகா; அவரது பக்கத்தில் உட்காருவதற்கு மிகச் சரியான ஆள்தான் தற்போது விஷாலாக உட்கார்ந்து இருக்கிறார். தன்ஷிகாவும் விஷாலும் காதல் வயப்பட்டு இருக்கிறார்கள்.

நடிகர் சங்கத்தை நீ திறந்து விட்டால் அதில் எனக்கு என்ன பிரச்சினை.. விஷால் செல்லத்துக்கு வெட்கத்தை பாருங்கள். எனக்கு விஷாலை மிகவும் பிடிக்கும்.

விஷால் பார்ப்பதற்கு மட்டும்தான் கொஞ்சம் கரடு முரடாக இருப்பார். அவருக்கு குழந்தை போல ஒரு மனது இருக்கிறது. அந்த குழந்தையை நீ நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் தன்ஷிகா. உன்னுடைய வன்முறையெல்லாம் அங்கே வைத்துக் கொள்ளாதே. இன்றைக்கு ஹாட் மேட்டர் இதுதான். இந்த மேடையே வேறு மாதிரியான ஒரு மேடையாக இருக்கிறது.

நீங்கள் மலர் மாலையோடு இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். உங்களை பத்திரிகையாளர்கள் கொண்டாடி வாழ்த்தி இருப்பார்கள். விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்’ என்று பேசினார். இதைக்கேட்ட விஷாலும், சாய் தன்ஷிகாவும் வெட்கத்தோடு சிரித்தனர். இதன் மூலம் விஷாலும் தன்ஷிகாவும் திருமணம் செய்ய இருப்பது உறுதியாகி இருக்கிறது.