தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Viruman Director Muthiah Is The Director Who Casts His Son As An Actor In His Next Movie

Director Muthiah: மதுரைதான் களம்..மகனை நடிகனாக களமிறக்கும் இயக்குநர் முத்தையா! - முழு விபரம் உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 22, 2024 11:39 AM IST

திரையில் கால்தடம் பதிக்கும் இயக்குநர் முத்தையாவின் மகன்!

நடிகனாகும் இயக்குநர் முத்தையாவின் மகன்!
நடிகனாகும் இயக்குநர் முத்தையாவின் மகன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் தற்போது தன்னுடைய மகனான விஜய் முத்தையாவை கதாநாயகனாக களமிறக்கி இருக்கிறார். முத்தையா எழுதி இயக்கும் இந்த படத்தின் கதை, மதுரை மாவட்டத்தை சுற்றி நகர்வதை போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. 

இளைஞர்களை மையப்படுத்திய எமோஷனல் டிராமாவாக இந்த படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய் முத்தையா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

முழுக்க முழுக்க புதுமுகங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தின் மிகமுக்கிய சண்டை காட்சி ஒருவாரம் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக பெரும் பொருட்செலவில் சினிமா திரையரங்கை செட்டாக உருவாக்கி உள்ளனர். 

இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகள் எம். சுகுமார் மேற்கொள்ள, வெங்கட்ராஜூ படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கலை இயக்குனராக வீரமணி கணேசன் பணியாற்ற இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்