தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Violinist Kunnakudi Vaidyanathan Birthday Today

HBD Kunnakudi Vaidyanathan: தவிர்க்க முடியாத இசை மேதை வயலின் வித்தகர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil
Mar 02, 2024 06:15 AM IST

அனைத்து பாடல்களையும் தன் கையில் இருக்கும் வயலின் மூலம் வார்த்தைகளால் உச்சரித்து பாடுவது போலவே இசைத்து காட்டும் திறமை கொண்ட ஜாம்பவான் இவர்.

குன்னக்குடி வைத்தியநாதன்
குன்னக்குடி வைத்தியநாதன்

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்து பாடல்களையும் தன் கையில் இருக்கும் வயலின் மூலம் வார்த்தைகளால் உச்சரித்து பாடுவது போலவே இசைத்து காட்டும் திறமை கொண்ட ஜாம்பவான் இவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்னக்குடியில் பிறந்தவர். 12 வயது முதல் இருந்தே இசைக்கச்சேரிகளில் பங்கேற்க தொடங்கி விட்டார்.

பாடல்கள் மட்டுமல்லாது மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் ஓசைகளையும் தனது வயலின் மூலம் வாசித்துக் காட்டும் திறமை உள்ளவர். வா ராஜா வா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

திருமலை தென்குமரி திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 22 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து இருக்கிறார்.

திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலாளராக 28 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்துள்ளார். இவரது வயலின் திறமைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழ் பக்தி இசையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். ஏ.பி.நாகராஜன் வா ராஜா வா படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார். "சீர்காழி கோவிந்தராஜன்" அகத்தியராக நடித்த அகத்தியர் போன்ற பல வெற்றி படங்களைக் கொடுத்தார். மேலும் அவர் இசையமைத்த ராஜ ராஜ சோழனும் அபார வெற்றி பெற்றது.

2005 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய அந்நியன் தமிழ் திரைப்படத்தில், தியாகராஜ ஆராதனை விழாக் காட்சியில் ஐயங்காரு வீடு பாடலுக்காக வைத்தியநாதன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். மேலும் பல படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தோடி ராகம் திரைப்படத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டார், டி.என். சேஷகோபாலன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார், ஆனால், அது பெரிய அளவில் வரவேற்பைப் பெற தவறியது.

ஆகச்சிறந்த கலைஞர்களை நினைவு கூறுவது என்பது தற்போது இருக்கும் தலைமுறைகளின் முக்கிய கடமையாகும். அந்த வகையில் வயலின் சக்கரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் 89வது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்