Vinusha Vs Nixen: தவறை உணராத நிக்சன்.. வச்சு செய்த வினுஷா
தன்னை பற்றி விமர்சித்த நிக்சனிடம் நியாயம் கேட்டிருக்கிறார் வினுஷா.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் கிட்டத்தட்ட அதன் கிளைமாக்ஸை நெருங்கி விட்டது. ஏற்கனவே எலிமினேட்டாகி வெளியே சென்ற பலரும் இந்த வாரம் வீட்டிற்குள் வந்து இருக்கிறார்கள்.
வினுஷா தேவியின் உடல் அமைப்பை பற்றி நிக்சன் தவறாக பேசியது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. அதில் நிக்சன், வினுஷாவை பார்க்க பிடிக்கல. அவர் வேலைக்காரி மாதிரி இருக்கிறார்.மண்டை சிறியதாக இருக்கிறது.
அங்கங்க இருக்க வேண்டியது இல்லை. கண்கள் அழகாக இருக்கிறது என்று வந்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ வினுஷா பிக்பாஸுக்குள் இருக்கும்போதே சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. வினுஷா வெளியேறி சென்ற பிறகு இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் வினுஷா வெளியேறிய பிறகு பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் நடந்தது. அதில் போட்டியாளர்கள் பின்னால் பேசிய விஷயங்கள் பற்றி திரையில் போட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது நிக்சன், வினுஷா பற்றிய பேசிய விஷயத்திற்கு விளக்கம் கொடுத்தார். அப்போது பூர்ணிமா, நிக்சன் பேசியதை தவறு என சொல்லாமல் கை தட்டி தன்னை பற்றி பேசியதை என்ஜாய் செய்தார்.
நிக்சன் வெளியேறிய பிறகு வினுஷாவிற்கு போன் செய்து மனிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் வினுஷா 70 கேமரா முன்பு தானே இந்த விஷயம் பேசப்பட்டது. அதனால் 70 கேமரா முன்பே இந்த விஷயத்தை பேசி கொள்ளலாம் என கூறிவிட்டார்.
இந்நிலையில் நிக்சன் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருக்கிறார். அப்போது வினுஷாவும், நிக்சனும் பேசி கொண்டு இருந்தார்.
வினுஷா தன்னை உருவகேலி செய்த விஷயம் பற்றி பேசினார். அப்போது அதற்கு மன்னிப்பு கேட்டுகொள்வதாக கூறிய நிக்சன், தான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை, ஆனால் தவறாக காட்டப்பட்டது என பேசினார்.
வெளியில் தப்பாக காட்டப்பட்டுள்ளதனால் நீ மன்னிப்பு கேட்கிறாய் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏற்று கொள்வேன் “ என்றார். இதை பார்த்த ரசிகர்கள் வெளியே சென்று பார்த்தும் இந்த நிக்சன் சற்றும் மாறவே இல்லை என வசைப்பாடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.