Vinodhini: ‘ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐயர் நான்; அட்ஜஸ்ட்மென்ட்ட கொச்சையாக்கிட்டாங்க; யாருக்கும் தொல்லை இல்லன்னா’- விநோதினி-vinodhini latest interview about kollywood adjustment me too controversy - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vinodhini: ‘ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐயர் நான்; அட்ஜஸ்ட்மென்ட்ட கொச்சையாக்கிட்டாங்க; யாருக்கும் தொல்லை இல்லன்னா’- விநோதினி

Vinodhini: ‘ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐயர் நான்; அட்ஜஸ்ட்மென்ட்ட கொச்சையாக்கிட்டாங்க; யாருக்கும் தொல்லை இல்லன்னா’- விநோதினி

Kalyani Pandiyan S HT Tamil
Aug 26, 2024 10:44 AM IST

Vinodhini: அது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதனால் யாருக்கும் தொல்லை இருக்கக் கூடாது அவ்வளவுதான். நாங்களெல்லாம் ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐய்யர்கள் - விநோதினி பேட்டி!

Vinodhini: ‘ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐயர் நான்; அட்ஜஸ்ட்மென்ட்ட கொச்சையாக்கிட்டாங்க; யாருக்கும் தொல்லை இல்லன்னா’- விநோதினி
Vinodhini: ‘ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐயர் நான்; அட்ஜஸ்ட்மென்ட்ட கொச்சையாக்கிட்டாங்க; யாருக்கும் தொல்லை இல்லன்னா’- விநோதினி

எதற்காக பயப்பட வேண்டும்

இது குறித்து அவர் பேசும் போது, “மீ டூ இயக்கத்தில் நான் பல விஷயங்களை பேசி இருக்கிறேன். நாம் அதுகுறித்து பயப்பட வேண்டிய தேவை இல்லை. காரணம் என்னவென்றால், நாம் தவறு செய்யவில்லை. என்னுடைய கருத்தை கேட்பதற்காகத்தான் நீங்கள் என்னிடம் நேர்காணல் எடுக்க வருகிறீர்கள். இது என்னுடைய கருத்து மட்டுமே. அந்த விஷயம் குறித்தான பொதுவான கருத்து அது கிடையாது. 

என்னுடைய கருத்தை சீரியஸாக கேட்பவர்கள் கேட்பார்கள். இன்ன பிறர் அதை மிகவும் எளிதாக கடந்து சென்று விடுவார்கள். என்னை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் குறித்தெல்லாம் எல்லாம் நேர்காணல்களில் பேசக்கூடாது என்று நினைக்கிறேன். எல்லா தொழில்களிலுமே நேர்மறை மற்றும் எதிர்மறையான விஷயங்கள் இருக்கின்றன. 

அட்ஜஸ்ட்மென்ட் வார்த்தையே கொச்சையானது

அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை மிகவும் கொச்சையாக இருக்கிறது. இன்றைய காலத்தில் ஆண் பெண் இருவரும் டேட்டிங் செல்கிறார்கள். அதற்கு என்ன பெயர். அது அவரவர்களுடைய வாழ்க்கை முறை. அது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதனால் யாருக்கும் தொல்லை இருக்கக் கூடாது அவ்வளவுதான். 

நாங்களெல்லாம் ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐய்யர்கள். நான் மிகவும் கட்டுப்பாடு அடங்கிய குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய தொழில் சினிமாவாக மாறியது. நிறைய படங்கள் நடித்தேன். அதன் பின்னர், என்னுடைய ஜாதியான பிராமினிலேயே ஒருவரை கல்யாணம் செய்து கொண்டேன்.

முன்னதாக, தன் மீது வண்ண வண்ணப்பூக்கள் படத்தில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனம் குறித்து அவர் பேசிய பேட்டி இங்கே!

புடவைக்கட்டி நடித்தால் கூட விமர்சனம்

இது குறித்து அவர் பேசும் போது, “அந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் நல்ல அனுபவம். அந்த படத்தை பாலுமகேந்திரா டைரக்ட் செய்ததோடு, அதில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி1னார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. உண்மையில் அந்த படம் எனக்கு கிடைத்ததற்கு, நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

அந்தப் படத்தில் என்னுடைய ஆடை குறித்தான விமர்சனம் பரவலாக அப்போது பேசப்பட்டது உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் என்ன ஆடை உடுத்தி நடித்து இருந்தாலும் என்னை விமர்சனம் செய்திருப்பார்கள். இவ்வளவு ஏன் புடவை கட்டி நீங்கள் நடித்தால் கூட, அதையும் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள்.

அந்த டீனேஜில் நான் எப்படி நடித்தேன்?

ஆனால் நான் எதையும் மிகவும் பர்சனலாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த டீனேஜில் நான் எப்படி நடித்தேன் என்று கேட்கிறீர்கள். அதை அப்படியெல்லாம் இங்கு பார்க்க தேவையில்லை; அது போன்ற கதாபாத்திரங்களையெல்லாம் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பாகவே பாலிவுட்டில் நடித்து விட்டார்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் அப்போது வெறும் டீ சர்ட்டை மட்டும் அணிந்து யாரும் நடிக்கவில்லை. ஆனால் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு நடிகைகள் கபடி காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒரே ஒரு ஆடையை அணிந்து நடித்த காரணத்தால் பயங்கரமாக பேசப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அதைவிட குறைவாக ஆடைகளை உடுத்தி நடிகைகள் நடிக்கத்தான் செய்கிறார்கள்.” என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.