HBD Pradeep Rawat: எந்த ஆங்கிளில் பார்த்தாலும் கதிகலங்க வைக்கும் முகம்..! டபுள் ஆக்‌ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Pradeep Rawat: எந்த ஆங்கிளில் பார்த்தாலும் கதிகலங்க வைக்கும் முகம்..! டபுள் ஆக்‌ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர்

HBD Pradeep Rawat: எந்த ஆங்கிளில் பார்த்தாலும் கதிகலங்க வைக்கும் முகம்..! டபுள் ஆக்‌ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 21, 2024 06:30 AM IST

வில்லனாக இருந்தாலும் ஸ்டண்ட், ஆக்‌ஷன் என இறங்காமல் ஏய் என்ற குரலில் மிரட்டும் விதமாக பல படங்களில் தோன்றி வில்லத்தனத்தில் கலக்கியிருப்பார் பிரதீப் ராவத். சிறந்த வில்லனுக்கான பிலிம் பேர் விருதை வென்ற நடிகராகவும் உள்ளார்.

வில்லன் நடிகர் பிரதீப் ராவத் சிங் பிறந்தநாள் இன்று
வில்லன் நடிகர் பிரதீப் ராவத் சிங் பிறந்தநாள் இன்று

ஹீரோயின்களை போல் வில்லன் நடிகர்களையும் பார்த்து பழகிய முகங்களை கடந்த பழக்கப்படாத புதுமுகமாகவும், ஆஜானுபாக தோற்றத்தில் இருக்கும் வட இந்தியா, பாலிவுட் மொழிகளில் நடிக்கும் நடிகர்களை தமிழுக்கு வரவழைத்து நடிக்க வைக்கும் ட்ரெண்டும் இருந்தது.

அப்படியொரு காலகட்டத்தில் தமிழில் வில்லனாக அறிமுகமாகி மிரட்டியவர் பிரதீப் ராவத். எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாலும் மிரட்டலான வில்லன் லுக்கும், 6 அடிக்கு மேல் உயரத்துடன், கட்டுமஸ்தான உடலமைப்புடன் தோற்றத்தை கூடிய நடிகராக இருந்து வந்தார். என்னதான் வில்லனாக நடித்தாலும் ஏதாவது ஒரு படத்தில் மாறுதலுக்காகவும் வில்லனில் இருந்து மாறுபட்ட கேரக்டரில் சிலர் நடிப்பதுண்டு. அப்படி இல்லாமல் தமிழில் தோன்றிய பெரும்பாலான படங்களிலும் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் கேரக்டர்களிலிலேயே தோன்றி மிரட்டியவர் பிரதீப் ராவத்.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் ராவத், இந்தியில்தான் முதன் முதலில் அறிமுகமானார். ஆரம்பத்தில் போலீஸ், வில்லன் அடியாள் என சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு அமிதாப் பச்சன் நடித்த அக்னிபாத் திருப்புமுனை தரும் விதமாக அமைந்தது. அந்த படத்தில் அமிதாப்புடன் உலா வரும் கேரக்டரில் நடித்திருக்கும் பிரதீப் ராவத் கவனிக்கப்படும் நடிகரானார்.

90களில் பாலிவுட் படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரதீப் ராவத்தை தெலுங்கு திரையுலகினர் தென்னிந்திய சினிமாவுக்கு அழைத்து வந்தனர். இவரை தெலுங்கில் அறிமுகம் செய்தது இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான பாகுபலி புகழ் எஸ்.எஸ். ராஜமெளலி. நிதின் நடித்து 2004இல் வெளியான சை என்ற படத்தில் மிரட்டலான வில்லனாக தோன்றியிருப்பார்.

இவரை தமிழில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா படம் மூலம் சீனா தானா என்ற தாதா கேரட்ரில் நடிக்க வைத்தனர். 2005இல் வெளிவந்த இந்த படத்தை விஇஸட் துரை இயக்கியிருப்பார். தொடர்ந்து தமிழில் கஜினி, அசல், ராஜபாட்டை, ஜில்லா, வீரம், ஆம்பள என கவனிக்க தகுந்த படங்களில் நடித்தார். கஜினி படத்தில் இரட்டை வேடத்தில் தோன்றி சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார். ஒரு வில்லன் நடிகர் இரட்டையர்களாக தோன்றி இருவரும் கொடூர வில்லனாக இருக்கும் விதமாக கஜினி படம் இருந்தது.

தமிழ், தெலுங்கு என பிஸியான வில்லனாக வலம் வந்த பிரதீப் ராவத், மலையாளம், கன்னடம், போஜ்புரி, ஆங்கிலம், ஒடியா, பெங்காலி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தெலுங்கும் மோஸ்ட் வான்டட் வில்லனாக இருந்து வரும் பிரதீப் ராவத், அங்குள்ள ஹீரோக்களில், கிட்டத்தட்ட அனைவருக்கும் வில்லனாக நடித்துவிட்டதோடு, தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

வில்லன் என்றால் சண்டை செய்வதை காட்டிலும், அடியாள்களை ஏவி விடுவது, டேக்டிகலாக செயல்படுவது என கதாபாத்திர வடிவமைப்பு இருக்கும். ஆனால் வில்லன் காரணமே இல்லாமல் பார்ப்பவர்களை எல்லாம் ஏய் ஏய் என பலத்த சத்ததுடன் மிரட்டும் விதமாக வில்லன கதாபாத்திரங்கள் சினிமாக்களில் டிசைன் செய்யப்பட்ட சமயத்தில் நடித்தார் பிரதீப் ராவத். இதனால் தான் இவர் ஸ்டண்ட் செய்வதை காட்டிலும், பார்வையாலும், ஏய் என சத்தம் போட்டும் பார்வையாளர்களை அதிக படங்களில் அதிரவைத்துள்ளார்.

சினிமாக்களில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் பிரதீப் ராவத். துர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் அஸ்வத்தமா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிறந்த வில்லன் நடிகருக்காக பிலிம் பேர், நந்தி விருது, சைமா விருதுகளை வென்று மிரட்டலான வில்லான வலம் வந்து கொண்டிருக்கும் பிரதீப் ராவத்துக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.