விஜய்க்கு எல்லாமே வெற்றி தான்..சீமானிடம் பேசிவிட்டு சொல்கிறேன் - தஞ்சை பெரிய கோயிலில் ஆனந்த ராஜ் பேட்டி
விஜய்க்கு எல்லாமே வெற்றி தான், ரஜினியுடனான சந்திப்பு குறித்து சீமானிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து ஆனந்த ராஜ் பேட்டியளித்துள்ளார்.

தமிழ் சினிமாக்களில் மிரட்டலான வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ஆனந்தராஜ். தற்போது காமிக், காமெடி வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்புக்கு என தனியாக ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
இதையடுத்து, தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் ஆனந்த ராஜ் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டினர் எல்லோரும் தமிழ்நாட்டுக்கு வந்து தஞ்சை பெரிய கோயிலை பார்க்க ஆசைப்படுவார்கள், இது கட்டிட கலையுடன் கூடிய சிறப்பு வாய்ந்த ஆலயம். நான் இந்த சாமியை எப்போதும் மதிக்கிறேன். தஞ்சை வந்ததே கடவுளை தரிசிக்கதான்.
அரசியலை விட சினிமா நல்லா இருக்கு
கோயில் அரசியல் பேசலாமா? எனது கட்சி பணியை அதிமுக தலைமை முடிவு செய்யட்டும். தற்போது அரசியலை விட சினிமா நல்லா இருக்கு. அதனால் தான் அரசியலில் இல்லாமல் சினிமாவை பார்த்து வருகிறேன்.