Jayapriya interview: ‘21 தையல்.. காலெல்லாம் அப்படி எரியுது.. போன் பண்ணி மிரட்டுறாங்க..’ - விகரமன் மனைவி வேதனை!
அவர்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்ள அப்படி செய்து கொண்டார்கள். இந்த விஷயத்தை நான் மீடியாவில் சொன்ன பிறகு, அந்த மருத்துவமனை தரப்பிலிருந்து என்னை தொடர்பு கொண்டு, என்ன மீடியாவில் எங்களை பற்றி தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று மிரட்டுகிறார்கள்.
தனியார் மருத்துவமனையில் செய்த ஆபரேஷனால் தன்னுடையே வாழ்க்கையே முடங்கி விட்டது என்றும் மீடியாவில் இதைப் பற்றி பேசுவதால் மருத்துவமனை தரப்பு மிரட்டுவதாகவும் பேசி இருக்கிறார்.
இது குறித்து வாவ் தமிழா சேனலுக்கு அவர் பேசும் போது, “முதுகு வலி என்றுதான் சென்றேன். ஆனால் அவர்கள் கேன்சர் இருக்குமா என்று சோதனை செய்ய, பயாப்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
முதலில் நான் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை அதன் பின்னர் என்னுடைய கணவர் வற்புறுத்தி செய்ய வைத்தார். காரணம், மருத்துவர்கள் இந்த சோதனையை செய்ய வில்லை என்றால் ஒரு மாத காலத்தில் நான் இறந்து விடுவேன் என்று சொன்னார்கள்.
20 நிமிடமே அந்த அறுவை சிகிச்சை என்று என்னிடம் சொல்லப்பட்டது.ஆனால் மூன்று மணி நேரம் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. பயாப்சி என்பது ஒரு ஊசியை உள் நுழைத்து செய்யக்கூடிய அறுவை சிகிச்சை. ஆனால் என்னுடைய முதுகில் கிட்டத்தட்ட 21 தையல் போடப்பட்டது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை இப்போது வரை எங்களிடம் சொல்லவே இல்லை. ஆனால் அவர்கள் நான் உடல்நிலை குறைவோடு மருத்துவமனைக்கு வந்ததாக குறிப்பிட்டு என்னிடம் கையெழுத்து வாங்கி விட்டார்கள்.
அவர்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்ள அப்படி செய்து கொண்டார்கள். இந்த விஷயத்தை நான் மீடியாவில் சொன்ன பிறகு, அந்த மருத்துவமனை தரப்பிலிருந்து என்னை தொடர்பு கொண்டு, என்ன மீடியாவில் எங்களை பற்றி தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று மிரட்டுகிறார்கள்.
ஆனால் நான் எந்த மீடியாவிலும் அந்த மருத்துவமனையின் பெயரை சொல்லவே இல்லை. எங்களுடைய இந்த சோக சம்பவத்திற்கு நாங்கள் அவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு கூட வாங்கவில்லை. நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று விக்ரமன் சொல்லிவிட்டார். காரணம் அவர் அவருடைய படத்திற்கே பெரிதாக சம்பளம் வாங்க மாட்டார்.
அதனால் அதை அவர் விட்டுவிட்டார். பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நான் வருடக் கணக்கில் அதை செய்து பார்த்து விட்டேன்.எந்தவித பலனும் இல்லை. இது குறித்து அவர்களிடம் கேட்டபோது கூட, அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அவர்களுக்கு என்னை மீண்டும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக நான் மருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் மாலை நேரம் வந்தால் காலெல்லாம் மிகப்பெரிய அளவில் எரிய தொடங்கிவிடும்.” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்