Vikram: மலையாளத்தில் ரூ. 100 கோடி வசூல்.. ‘ஏ’ சர்டிபிக்கேட் பெற்ற மார்கோ ரீமேக்கில் நடிக்கிறாரா விக்ரம்? முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vikram: மலையாளத்தில் ரூ. 100 கோடி வசூல்.. ‘ஏ’ சர்டிபிக்கேட் பெற்ற மார்கோ ரீமேக்கில் நடிக்கிறாரா விக்ரம்? முழு விவரம்

Vikram: மலையாளத்தில் ரூ. 100 கோடி வசூல்.. ‘ஏ’ சர்டிபிக்கேட் பெற்ற மார்கோ ரீமேக்கில் நடிக்கிறாரா விக்ரம்? முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2025 02:55 PM IST

Vikram: வீர தீர சூரன் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இருக்கிறார் விக்ரம். தங்கலான் படத்தின் தோல்விக்கு பிறகு விக்ரமின் கம்பேக்காக வீர தீர சூரன் படம் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஏ’ சர்டிபிக்கேட் பெற்ற மார்கோ ரீமேக்கில் நடிக்கிறாரா விக்ரம்? முழு விவரம்
‘ஏ’ சர்டிபிக்கேட் பெற்ற மார்கோ ரீமேக்கில் நடிக்கிறாரா விக்ரம்? முழு விவரம்

மார்க்கோ ரீமேக்கில் விக்ரம்

இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் உன்னி முகந்தன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மார்கோ படத்தின் ரீமேக்கில் விக்ரம் நடிக்க இருப்பதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

மலையாள நடிகர் உன்ன முகுந்தனுடன், விக்ரம் இணைந்து நிற்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதை வைத்து பார்க்கையில் விக்ரம் மார்கே ரீமேக்கில் நடிக்கலாம் எனவும் பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மார்கோ படம் மலையாள ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகி, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில் படத்தின் ஹீரோ உன்ன முகுந்தனை சந்தித்த விக்ரம், அவரை பாராட்டியுள்ளார். மற்றபடி அந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பது பற்றி தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை நடிகர் விக்ரமின் நெருங்கிய வட்டார தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் மார்கோ ரீமேக்கில் விக்ரம் நடிப்பதாக உலா வரும் தகவல் வெறும் வதந்தி தான் எனவும் நிருபணம் ஆகியுள்ளது.

வீர தீர சூரன் படம்

வீர தீர சூரன் படம் இரண்டு பாகங்களை கொண்டதாக இருக்கும் எனவும், தற்போது வெளியாக இருப்பது வீர தீர சூரன் பார்ட் 2 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன் கதையாக பார்ட் 1, பின்னர் உருவாக உள்ளது.

படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, சித்திக் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒரு இரவில் நடக்கும் கதையாக படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் டைட்டில் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக வீர தீர சூரன் இருந்து வருகிறது.

விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தங்கலான் கலவையான விமர்சனங்களை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் எதிர்பார்த்த வசூலை பெர தவறியது. இருப்பினும் படத்தில் விக்ரம் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

இதையடுத்து வீர தீர சூரன் படம் விக்ரமுக்கு கம்பேக்காக இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளார்கள்.

வசூலை குவிக்கும் ஏ சர்டிபிக்கேட் படம்

கடந்த டிசம்பர் மாதம் உன்னி முகுந்தன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மார்கோ ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்துக்கு சென்சாரில் ஏ சர்டிபிக்கேட் கொடுக்கப்பட்டது. படத்திலும் சண்டை காட்சிகள் கொடூரமாகவும் அமைந்திருக்கிறது.

மலையாளத்தில் இப்படியொரு படம் வருவது அரிதானது என்றாலும், பான் இந்தியா ரிலீஸாக வெளியாகிய மார்கோ படம் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.