தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!

தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!

Malavica Natarajan HT Tamil
Published Jun 02, 2025 09:43 AM IST

மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!
தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!

நடிகர் சாந்தனுவின் இரங்கல்

அந்தப் பதிவில், என் அன்பான அண்ணன் விக்ரம் சுகுமாரனின் ஆன்மா சாந்தி அடையட்டும். நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நீங்கள், உங்களுடன் இருந்த அனைத்து தருணங்களையும் உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். உங்களை நாங்கள் அனைவரும் மிஸ் செய்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மாரடைப்பால் பேருந்தில் மரணம்

இவரது இறப்பு குறித்து சினிமா வட்டாரங்களில் விசாரிக்கையில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. இவரது மறைவு செய்தி கேட்டு அவருக்கு நெருக்கமான சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர்

தமிழ் சினிமாவில் ரியாலிட்டி சினிமாக்களுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் இயக்குநர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் வெளியான மதயானைக் கூட்டம் படம் ெரும் வெற்றி பெற்றது. கதிர், ஓவியா, கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் மதுரை மண் சார்ந்த மக்களின் வாழ்க்கையை கண்ணாடி போல் பிரதிபலிப்பதாக இருந்தது என பலரும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இந்தப் படத்தின் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றது.

விக்ரம் சுகுமாரன் படங்கள்

இதையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார் விக்ரம் சுகுமாரன். பின், அவர், நடிகர் சாந்தனுவை வைத்து இராவணக் கோட்டம் படத்தை இயக்கினார். இந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

நடிகர் விக்ரம் சுகுமாரன்

விக்ரம் சுகுமாரன் சினிமா இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான இவர், தேசிய விருது வென்ற ஆடுகளும் படத்திற்கு வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார். அத்துடன், வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்திலும், கொடி வீரன் படத்திலும் நடித்தும் உள்ளார்.